266 38 இராமன் - பன்முக நோக்கில் இராகவன், இது பொருத்தமானதும், செய்ய வேண்டியதும் ஆகும் என்று கூறினான். அனுமன் தோள்மேல் இராமன் ஏற யத்தனிக்கையில் வீடணன் எதிரே வந்தான். இராமனை வணங்கி, "பெருமானே! நடைபெற்ற எதையும் அடியேன் நம்பத் தயாராக இல்லை. கற்பின் கொழுந்தாகவும் அனைத்தின் அன்னையாகவும் உள்ள ஒருத்தியை இந்திரசித்தன் என்ற கயவன் வெட்டினான் என்றால், அது நம்பமுடியாத ஒன்றாகும். அப்படி நடந்திருந்தால் உலகம் ஏழும் இதற்குள் தீக்கிரையாகி இருக்கும். எனவே, இது அனைத்தும் இந்திரசித்தனின் மாய விளையாட்டு என்றே நினைக்கிறேன். நான் வண்டுருக்கொண்டு அசோகவனம் சென்று பார்த்து வரும்வரை உங்கள் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான்.துயரத்தால் உணர்ச்சிவசப்பட்டு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்த தசரத இராமனுக்கு வீடணன் கூற்றில் உண்மை இருக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்றியதால், தக்கது, அமைவது என்று கூறி, வீடணனுக்கு அனுமதி அளித்தான். نہ۔ ’’ வீடணன் உள்ளிட்ட இராமன் முதலிய அனைவரும் அறியாததும் நிகழ்ந்துமுடிந்தால் பேராபத்தை விளைக்கக் கூடியதுமான ஒரு செயல் இலங்கையுள் தொடங்கிவிட்டது. சீதை உயிருடன் இருக்கிறாளா என்று கண்டு வரத்தான் வீடணன் வண்டுருக்கொண்டு அசோகவனம் புகுந்தான். அவள் உயிருடன் உள்ளாள் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் செயல் ஒன்று அங்கு நடைபெறுவதை வீடணன் கண்டும், கேட்டும் அறிந்தான். ஆம்! இந்திரசித்தன் நிகும்பலை என்ற இடத்திற்குச் சென்று ஒரு வேள்வியை நடத்திட ஏற்பாடுகள் செய்துவிட்டான். வேள்விக்குரிய கலப்பை, நெய் முதலிய அனைத்துப் பொருள்களும் நிகும்பலை நோக்கிச் செல்வதையும், அங்கு நடக்கப் போகும் வேள்விபற்றி அரக்கர்கள் தம்முள் பேசிக்கொள்வதையும் கேட்ட வீடணன்,துடித்துப்போய் ஒரு வினாடிக்குள் மீண்டு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/286
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை