268 36 இராமன் - பன்முக நோக்கில் "என்றலும், இறைஞ்சி, யாகம் முற்றுமேல், யாரும் வெல்லார்; வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும் சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென் எனறான; நன்று அது புரிதிர்' என்னா, நாயகன் நவில்வதானான்." - கம்ப. 8935 இந்த யாகம் நடந்திருக்குமேல் தசரதகுமாரனின் இத்தனை முயற்சிகளும் வீணாகி இருக்கும். எனவேதான், அதன் உட்பொருளை அறிந்த வீடணன் வேள்வி முற்றுமேல் அரக்கர் வெல்வார் என்று கூறினான். இதற்கு என்ன செய்யலாம் என்று இராமன் சிந்திக்காதபடி செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும் என்ற கருத்தில் "இளையகோவை என்னுடன் அழைத்துச் சென்று வினை முடித்து மீள்வேன்" என்று வீடணன் கூற, அவ்வாறே செய்க என்று இராமனும் அனுமதி அளித்துவிட்டான். மூல ராமன் செயற்பாடு பிராட்டிக்கு ஒன்றம் இல்லை. இந்திரசித்தனும் அயோத்தி செல்லமாட்டான் என்று தசரதராமன் மனத்தில் உறுதிப்பாடு தோன்றாமல் செய்தது மூல இராமனின் பணியாகும். இந்த முடிவை இராமன் எடுத்திருந்தால், வீடணன் வண்டுருக் கொண்டு இலங்கையுள்நுழைந்திருக்கமாட்டான். அவ்வாறா யின் நிகும்பலை பற்றிய செய்தியை இராமன் அறிந்திருக்க முடியாது. வேள்வி முற்றியிருந்தால் இராமகாதையின் திசையே திரும்பியிருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் முழுதுணர் மூலஇராமன் மாயா சீதைகொலை, இந்திரசித்தன் அயோத்தி பயணம் என்று நடவாத இரண்டு செய்திகளைப் பரப்புமாறு செய்கிறான். தசரதராமன் கலக்கமே வீடணனை வண்டுருக் கொண்டு இலங்கையினுள் நுழைய காரணமாகின்றது. சில சமயங்களில் மாபெரும் காரியங்கள் நிகழ இராமன் போன்ற மகாபுருஷர்களின் மனத்தில்கூடக் குழப்பம் உண்டாகுமாறு செய்கிறான் இறைவன்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/288
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை