பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 269 இதனை அடுத்து இந்திரசித்தனைக் கொன்று அவன் தலையைக் கொணர்ந்து இராமன் திருவடிகளில் வைத்து இலக்குவன் வணங்கவும், அவனைத் தழுவி அன்பு காட்டிவிட்டு, ஆடவர் திலக் வீடணன் தந்த வென்றிசது' என்று சொல்வது, வீடணன் புண்பட்ட மனத்தை ஆற்றுவதற் காகமட்டுமன்று. நிகும்பலைபற்றி வீடணன் சொல்லாதிருப் பின் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்த வள்ளல், அந்த வேள்வி முடிவதற்கு முன்னரே இந்திரசித்தனைக் கொல்லுமாறு வழிசெய்தவன் வீடணன் என்ற கருத்தை மனத்துள் கொண்டுதான் வீடணன் தந்த வென்றிாது என்று கூறுகிறான் என்பதை அறிய முடிகிறது. வீடணத் தம்பி செய்த மிகப் பேருதவி இது. நாகபாசத்தால் இலக்குவன் ஆவி குலைந்தபோது இராமனே நிலைகுலைந்தான் என்பதும், கெடுத்தனை வீடணா என்று உடன்பிறவாத் தம்பியைக் கடிந்தான் என்பதும் முன்னரே கண்டோம். அங்கே இராமன் அவசரப் பட்டுச் செய்துவிட்ட பிழைக்குக் கழுவாய்போல நிகும்பலை வெற்றியை நினைந்து, வீடணன் தந்த வெற்றி என்ற கனிவுரை அமைகின்றது என்பதை மீண்டும் நினைவிற் கொள்வோமாக. 'நாவினாற் சுட்ட வடுவை நாயகனே மாற்றிவிடுகிறான். இராமன் மீண்டும் அவசரப்பட்டான் அடுத்து இராம - இராவண போரில், இராவணன் இறந்து கிடக்கையில் அவன் முதுகில்பட்ட காயவடுக்களைக் கண்ட இராகவன் அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வந்து பின்வருமாறு பேசலானான்: 'இராவணனை வென்றேன் என்ற என்னுடைய புகழுக்குக் காரணமான செயல், போரில் புறமுதுகிட்ட ஒருவனை வென்றேன்' என்று நினைக்கும் பொழுது அப்புகழ் மாசு அடைந்துவிட்டது."(9908) "சிவபெருமான் உறையும் கைலை மலையைத் தூக்கிய போது கைகள் நசுக்குண்டான் என்பதில் பழி ஒன்றுமில்லை. ஆனால், கார்த்தவீரியன் என்பவனால் கட்டுண்ணப்பெற்ற