பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 38 இராமன் - பன்முக நோக்கில் ஒருவனை வென்றதற்கு நாணமடையும் அதே நேரத்தில் 'புறமுதுகில் தழும்புண்டாகும்படி வென்றேன்' என்று நினைப்பதில் பெரிதும் நாணம் அடைகின்றேன்." (9909) "வீடனா! நான் இறந்த பிறகும் நிலைத்து நிற்க வேண்டிய என் புகழ் மாசுபடும்படியும், கெளரவம் இல்லாத வெற்றியைப் பெற்று நாணமடையாமல் உண்கின்றான்' என்று பகைவர் எள்ளி நகையாடும்படி புறமுதுகிட்டு ஒடும் ஒருவனை வென்றதால் என் வருத்தம் அதிகமாகிறது.” (9910) இக் கருத்து அமைய இராமன் கூறியதும் மனம் நொந்துபோன வீடணன், எல்லையற்ற துயரத்துடனும் வருத்தத்துடனும் பேசலானான். தமையன் அறம் பிறழ்ந்தமை யால் அவனைப் பிரிந்து வந்தவன் தருமத் தம்பியாகிய வீடணன். ஆயினும், பாசமென்ற பசையற்ற பிண்டமாக வீடணன் மாறிவிடவில்லை. “செல்வனே! செவ்விய தொடர்ந்த அல்ல செப்ப வேண்டா” (991) என்று கூறிய வீடணன், தொடர்ந்து பேசுகிறான். "ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய! மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த, மெய்ம்மை; தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல் - தன்மை நோயும் நின்முனிவும் அல்லால், வெல்வரோ - நுவலற்பாலார்?" - கம்ப. 9912 என்ற பாடலின் கருத்து நினையத்தக்கது. வாலியிடமும் கார்த்தவீரியனிடமும் உற்ற தோல்வி இராவணன் வீரக்குறைவால் அன்று; தேவர்கள் சாபத்தாலேயே ஆகும். தாயைப்போல வணங்கத்தக்க பெருமாட்டியிடம் கொண்ட தவறான ஆசையும், உன் சினமும் அல்லால் வீரர் என்று சொல்லத் தக்கவர் யாவர் இவனை வெல்லக்கூடியவர்."