உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 271 “உலகம் முழுதும் தேடிச் சென்று பகைவர் யாருமின்மை யால் திக்கஜங்களோடு போரிட்டு இவன் மார்பில் குத்தி ஒடிந்த தந்தங்கள் புறமுதுகில் பட்டதால் ஏற்பட்ட தழும்புகளே ஆகும்." (9913) "இப்போரிடை அவன் மார்பில் தங்கிய திக்கஜங்களில் கொம்புகள் உன் அம்பின் விசையாலும், மார்பில் குத்திய விசையாலும் புறமுதுகு வழியே வெளிப்பட்டனவே தவிர, இவனைப் புறமுதுகிடச் செய்தவர் யாரும் இல்லை” (9914, "உலகத்தைப் பன்றி வடிவெடுத்துத் தாங்கிய திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் என்று இவன் அழியப் போகிறான்' என்று காத்து நிற்கிறார்கள். உன் அம்புபட்டு இவன் மாய்ந்தான் என்ற செய்தியைக் கேட்டும்கூட அவர்கள் நம்பமாட்டார்கள்.” (9916) - - - ..." வீடணனின் இந்த வார்த்தைகள் வெற்றுப் பாசத்தால் மட்டுமே விளைந்தவை அல்ல என்பதை மேற்போக்காகப் படிப்பவரும் உணர்வர். இராவணன் வீரத்துக்கு மாசு கற்பிப் பவன் இராமனே யாயினும் வீடணனால் பொறுக்க முடியாது. இவற்றைக் கேட்ட இராகவன், தான் அவசரப்பட்டுக் கூறியவற்றிற்கு வருந்தி, நாணமும் ஐயமும் நீங்கியவனாய் "வீடனா! இறந்தவன் மேல் சந்தேகப்படும் செயலை நான் செய்தேன். அது நிற்க. இவனுக்கு நீ ஆற்ற வேண்டிய கடமைகளை வேத விதிப்படி ஆற்றுவாயாக" என்று கட்டளை இட்டான். இராவணனுக்கு உரிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த வீடணனுக்கு இலக்குவனைக் கொண்டு முடிசூட்டுவித்தான் இராகவன். உடன் பிறவாத் தம்பியர் மூவர் - ஒர் ஒப்பீடு இராமன் வனம் புகுந்த பிறகு கிடைத்த மூன்று சகோதரர்களுள் இருவருக்கு முடிசூட்டப் பெற்றது. சராசரி மனிதனைப் போன்றிருந்த சுக்கிரீவனுக்கும், மிக உயர்ந்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/291
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை