274 38 இராமன் - பன்முக நோக்கில் போக்குதல் கடினம். இதனை நினைந்தே திருநாவுக்கரசு சுவாமிகள், . "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனைநான் அலேன்" (5-91-3) என்று பாடிச் செய்வது இக்கருத்துக்கு அரண் செய்வதாகும். இதனெதிராக அறிவு, ஞானம் என்பவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பின் வழிச்சென்று நான் என்ற எண்ணத்தை முழுவதுமாக இராமன்மாட்டுக் கொண்ட பக்தியில் கரைத்துக்கொண்டு, அன்பே வடிவாய் இராமன் திருவடிகளில் சரணம் அடைந்து அதில் கலந்துவிட்டவன் குகன். அவனை நினைத்துக்கொண்டபோதே குகன் என்ற அன்பின் வடிவம் இராமனுள் புகுந்து விடுகிறது. இப்பொழுது எஞ்சி இருக்கும் குகன், இராமன் அன்பை நிரப்பிக் கொண்ட வெறும் உடம்பு ஆகும். எனவே, இராமனின் பிரதிபிம்பமாக நிற்கும் குகனுக்கு முடிகவித்தால் அது அவனைப் பிரிப்பதுபோல் ஆக்கிவிடும். எனவே, குகனை ப் பொறுத்தவரை திருமுடிசூட்டலோ, திருவடி சூட்டலோ நடைபெறவே இல்லை. "என் ஆணையால் இங்கேயே தங்கி என் சுற்றத்தைக் காப்பாயாக’ என்ற இராகவனின் கட்டளையைத் தலைமேற் கொண்டு கங்கைக் கரையிலேயே தங்கிவிட்டான். அவனைப் பொறுத்தவரை மணிவாசகர் கூறிய, 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?" (8 - 33 - 7) என்ற பாடலுக்கு இலக்கியமாகிவிடுகின்றான் குகன். கோசலை, பரதன், இராமன் - இவர்களும் குகனும் இராமனின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட காரணத்தினால்தான் பிறர் யாரும் சிந்திக்கவோ கூறவோ
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/294
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை