உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 275 முடியாத ஒரு கருத்தைக் குகனால் பேச முடிந்தது. பரதன் வந்த கோலத்தையும், அவன் வந்த காரணத்தையும் அறிந்துகொண்ட குகன் இதோ பேசுகிறான்: - "தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை, "தீவினை" என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்ற போழ்து, புகழினோய்! தன்மை கண்டால், ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! - கம்பு 2337 ஆயிரம் இராமரும் உனக்குச் சமானம் இல்லை என்று வாய்விட்டுத் துணிவோடு கூற யாருக்கு உரிமை உண்டு? இராமகாதையில் மூவருக்கு அந்த உரிமை உண்டு என்பதை அறிலாம். தன்னையே அறிந்த இராமன் அதைக் கூறலாம்; இராமனின் இன்னொரு பகுதியாக மாறிவிட்ட குகன் அதனைக் கூறலாம். அன்பு காரணமாக அந்த இராமனையே தன் வயிற்றில் பத்து மாதங்கள் அடக்கி வைத்துக் கொண்டிருந்த தாயார் கோசலை கூறலாம். குகன் பரதனைப் பார்த்து ஒரு நாழிகைப் பொழுதிற்குள் அவனை எடையிட்டு, "பரதா! ஆயிரம் இராமரும் உனக்குச் சமமில்லை” என்று கூறிவிட்டான். இராமனைப் பெற்றவளும் பரதனை வளர்த்தவளும் நால்வர்க்கும் வேற்றுமை மாற்றியவளும், அன்பே வடிவானவளும் ஆகிய கோசலை இதோ பேசுகிறாள். "இராமா! நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்" (1609) என்று தொடக்கத்தில் பேசிய அந்தப் பெருமாட்டி இறுதியில் - "எண்ணில்கோடி இராமர்கள் என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ? 3. (10181) இங்குக் கூறப்பெற்ற பரதன், குகன், கோசலை என்ற மூவருக்கும் உள்ள பொதுத் தன்மை ஒன்றுண்டு. அகங்கார,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/295
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை