276 38 இராமன் - பன்முக நோக்கில் மமகாரங்களை அறவே நீக்கி அன்பே வடிவாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள் மூவரும். ஆதலால்தான் குகனை அணைத்துக் கொண்டதோடு நிறுத்திய இராமன், "குகனே! இந்த உலகம் உம்முடையது; உன் ஏவலில் நான் ஆட்சி செய்கிறேன்" (1994) என்று தொடங்கியவன், சிலபாடல்கள் கழிந்ததும் "உன் சுற்றம், உன்நாடு என்பவை என்னுடையவை. என் ஆணையால் இங்கேயே இருந்து ஆட்சி செய்வாயாக" (1997) என்று கூறுகிறான். இவ்வாறு கூறுவதன் அடிப்படையைச் சிந்தித்தால் ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும். குகன், இராமன் என்ற இரண்டு பாத்திரங்களும் ஒன்றாக ஆகிவிட்டமையின், உன்னுடைய நாடு’ என்று தொடங்கியவன் என்னுடைய நாடு' என்று முடிக்கிறான். இந்த நுணுக்கத்தை அறிந்த நம் முன்னோர்கள் பெரிய பெருமாளுக்கு இணையாகக் குகனையும் பெருமாள்' என்றே அழைத்து அவ்விருவருள் வேறுபாடின்மையை அறிவித்தனர். இளைய பெருமாளாகிய இலக்குவனுக்கு வாய்த்த அதே பெருமிதத் தகுதியை வைணவர்கள் குகனிடம் கண்டு போற்றுகிறார்கள். இராமனிடம் போதனை பெறாதவன் குகன் - பர்தனைப் போல முடிசூட்டிக் கொண்ட வீடணனை அழைத்து, பற்பல நீதிகளைக் கூறினான் இராகவன். இதேபோன்று சுக்கிரீவனுக்கும் பல நீதிகளைக் கூறினான். ஆனால், பதினாலு ஆண்டுகள் கோசலத்தை ஆளப்போகின்ற பரதனுக்கோ, சிருங்கிபேரத்தை ஆளுகின்ற குகனுக்கோ எவ்வித நீதியையும் புகட்டவில்லை இராமன். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அறிவின் துணைகொண்டு ஆட்சியைக் கைப்பற்றியவர்க்கு அறிவுரை தேவை. ஏனென்றால், அறிவு என்பது இருபுறமும் கூர்மையான வாள் போன்றதாகும். ஆதலால்தான் அறவுரை பகரவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அன்பின் துணைகொண்டு, அன்பு வழியில் ஆண்டுகொண்டிருக்கிற குகனுக்கும், ஆளப்போகிற
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/296
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை