இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 277 பரதனுக்கும் எவ்வித உபதேசமும் தேவைப்படவில்லை என்ற நுண்மையான கருத்தை மறைமுகமாகக் கவிஞன் சொல்லிச்செல்கிறான். முடிவாக உடன் பிறந்த தம்பியர் மூவர்; உடன் பிறவாத தம்பியர் மூவர். முன்னை மூவர்க்குப் பின்னை மூவர் இளைத்தவர் அல்லர். இராமன்மர்ட்டுக் கொண்ட ஈடுபாட்டில் உடன் பிறவாத தம்பியரும் சிறப்பு மிக்கவராகவே படைக்கப்பட்டுள்ளனர். - இம்மூவர் நிலைகளை ஒப்பிட்டு நோக்குமிடத்து அறிவுகொண்டு இயங்கியவர் இருவர் என்பதையும் உணர்வு கொண்டு இயங்கியவன் குகன் என்பதையும் கண்டோம். இம்மூவரில் ஒருவனை மகாராஜா எனவும், மற்றொருவனை ஆழ்வார் எனவும், வேறொருவனைப் பெருமாள் எனவும் வைணவ உலகம் போற்றுகிறது. ஆழ்ந்து சிந்தித்து நோக்கினால் கவிச்சக்கரவர்த்தியின் படைப்பு அவ் வைணவ மரபின் வழியிலேயே அமைந்திருப்பதை உணர முடிகிறது.