12 38 இராமன் - பன்முக நோக்கில் வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்குஇரும் பெளவம் இரங்குமுன் துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்விழ் ஆலம்போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே - அகம் - 70 என்று பேசுகிறது. (கவுரியர் - பாண்டியர்; தொன்முது கோடி -பழமையான தனுஷ்கோடி, பெளவம் - கடல்; அருமறை - மந்திராலோசனை பல்வீழ் ஆலம் - பல விழுதுகளையுடைய ஆலமரம்) அகநானூற்றுப் பாடல் இராமனை அவதாரமாக வெளிப்படையாகக் கூறவில்லை. ஆயினும், ஏதோ ஒரு தெய்வீக ஆற்றல் அவனுக்கு இருந்தது என்பதைக் குறிப்பாகச் கட்டுகிறது என்பதில் ஐயமில்லை. வான்மீகத்தில் இல்லை சங்க இலக்கியம் தரும் இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் வான்மீகத்திலோ, கம்பனிலோ இடம்பெறவில்லை என்பதையும் அறிதல் வேண்டும். எனவே, ஆதிகாவியம் என்று போற்றப்பெறும் வான்மீகத்தில் இல்லாத பல இராமகாதை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வழங்கின என்பதற்கு இவை இரண்டும் எடுத்துக்காட்டுகளாகும். அதே நேரத்தில் இராமனைப் பற்றிய கதைகள் சங்ககால மக்களிடம் மிகுதியாகப் பயின்றன என அறியலாம். இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருந்ததாக அறிகிறோம். சங்கப் பாடல்களின் அமைப்புமுறை இன்னும் அதிகமான அளவில் இராம காதையைப் பயன்படுத்த ஏனோ இடம் அளிக்கவில்லை.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை