280 38 இராமன் - பன்முக நோக்கில் விசுவாமித்திரன் இராம, இலக்குவரை மிதிலைக்கு அழைத்து வந்தான். தங்களை வரவேற்ற சனகனிடம், இவர்கள் யார் என்று அறிமுகம் செய்துவைக்கின்ற போது விசுவாமித்திரன் கூறிய சொற்கள் கருத்தாழம் நிறைந்தவை. "இருந்த குலக்குமரர்தமை இருகண்ணின் முகந்து அழகு பருகநோக்கி, அருந் தவனை அடி வணங்கி, யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன, ‘விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணியவந்தார், வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான்" - கம்ப. 636 மகா ஞானியும், கர்ம யோகியும் ஆன சனகன், "இருந்த குலக்குமரர் இருவரையும் இரு கண்ணால் முகந்து அழகு பருக நோக்கின்” பார்வையின் நுண்மையை, பலகாலம் அரசனாக இருந்து பிரம்ம ரிஷியாக மாறிய விசுவாமித்திரன் ஒரு வினாடியில் புரிந்தகொண்டான். எனவே, இவர்கள் யார் என்ற வினாவிற்குத் தசரதன்தன் புதல்வர் என்ற விடையை முதலிற் கூறாது நின் வேள்வி கானிய வந்தார்; வில்லும் காண்பார் என்ற சொற்களைக் கூறுவதன் மூலம் சனகன் வயிற்றில் பாலை வார்க்கிறான் முனிவன். பெண்ணைப் பெற்றவர்கள் இளைஞர்களைக் கண்டால் தம் மகளுக்கு ஏற்றவனாய் இவன் இருப்பானா என்ற எண்ணம் மனத்தில் தோன்றுவது இயற்கை. அதே எண்ணத்தில்தான் சனகன் இவர்களை நோக்கினான். அழகை இரு கண்ணில் பருக நோக்கினான் என்றால், அந்த ஞானி இவர்கள் உடலழகில் மட்டும் ஈடுபட்டிருக்க முடியாது. இவர்கள் முகத்தின் மூலம் அகத்தழகையும் பார்த்ததால்தான் பருகினான் என்கிறான் கவிஞன். இராமனுடைய அகி, புற அழகு பருகப் பருகத் தணியாத தாகத்தைத் தந்தது என்பது
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/300
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை