பிராட்டியும் இராமனும் ே 28i உண்மைதான். அப்படியானால் இரு கண்ணில் பருகப் பார்த்து' என்று சொல்லியிருக்கலாமே ! அவ்வாறு சொல்லாமல் பருகநோக்கி’ என்பதால் சனகன் பார்வையில் ஏதோ ஒர் உள்நோக்கம் இருந்தது என்பதை விசுவாமித்திரன் புரிந்து கொண்டான் என்பதோடு நாமும் புரிந்தகொள்ள வேண்டும் என்பதற்காகக் கவிஞன் நோக்கி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். இந்த நோக்கின் உட் பொருள் யாது? ஏனையோர் போலப் பெண்ணைப் பெற்றிருந்தால் இளைஞனின் அழகைப் பார்த்து மணம் செய்து கொடுத்துவிடலாம். சனகன் வளர்த்த பெண்ணுக்கு மணம் செய்ய வேண்டுமானால் ஒரு பெருஞ்சிக்கல் உள்ளது. சிவதனுசை வளைத்து, நாண் ஏற்றுபவனே சீதைக்கு மாலையிட முடியும். எனவே, இராமன் அழகில் ஈடுபட்ட தைவிட அவன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான் சனகன். அந்தக் குறிப்பை அறிந்த விசுவாமித்திரன் வில்லும் காண்பார் என்று சொல்வதன் மூலம் சனகன் செவிகளில் தேனைப் பாய்ச்சினான். கம்பன் பாடலில் உள்ள இந்த நுணுக்கத்தை இராம நாடகக் கீர்த்தனை எழுதிய அருணாசலக் கவி இந்த இடத்தைப் பாடவரும்பொழுது, இக் கருத்தை மிக விளக்கமாகப் பாடிக் காட்டுகிறார். "யாரோ என்று எண்ணாமலே" என்ற பைரவி ராகக் கீர்த்தனையில், பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ என்று பார்க்க வேணும் என்று ஒர் ஆசை என்று வருவது அவருடைய கருத்தை விளக்குகிறது. தசரதன் பிள்ளைகளா? அப்படியானால் ..... அடுத்தபடியாக விசுவாமித்திரன் தசரதன்தன் புதல்வர் என்று கூறியவுடன், பெண்ணைப் பெற்றவன் மனத்தில் ஒர் ஐயம் நிகழ இடமுண்டு. அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவனுடைய மகனுக்கு என் பெண்ணைக் கொடுப்பதா? தந்தை அப்படி என்றால் மகன் எப்படி இருப்பானோ என்ற
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/301
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை