282 38 இராமன் - பன்முக நோக்கில் ஐயம் சனகன் மனத்தில் தோன்றத்தான் செய்யும் என்று நினைத்த விசுவாமித்திரன், அதற்கு நேரடியாக விடைகூறாமல் வேறு வகையில் சனகன் ஐயத்தைப் போக்குகிறான். "திறையோடும் அரசு இறைஞ்சும் செறிகழற்கால் தசரதன் (لا,4:ئے பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வர் எனும் பெயரே காண்! உறை ஒடும் நெடுவேலாய்! - உபநயன விதிமுடித்து, மறை ஒதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்" - கம்ப 660 என்ற பாடலில் தசரதன்தன் புதல்வர் எனும் பெயரேகாண் என்று கூறுவது சிந்திக்கத் தக்கது. பெயரளவில் 'அவன் புதல்வர்கள் என்று முனிவன் கூறுவதன் நோக்கம் என்ன வேள்வியில் கிடைத்த பிரசாதத்தை உண்டதால் பெறப்பெற்ற பிள்ளைகள் இவர்கள். எனவே, தசரதன் பெற்ற பிள்ளைகளே என்று நினைத்துத் தசரதன் பழக்கம் பிள்ளைகளுக்குப் வந்திடுமோ என்று நீ அஞ்ச வேண்டாம் என்ற நுண்மையான கருத்தைப் புதல்வர் எனும் பெயரே காண்’ என்ற சொற்களில் வெளிப்படுத்துகிறான் கவிஞன். அப்படி இருப்பினும் தசரதனால் வளர்க்கப்பட்டிருப்பின் தந்தையின் பழக்கம் மைந்தர்கட்கும் வருமே என்ற ஐயத்தையும் போக்க இவர்களுக்கு உபநயன விதிமுடித்து மறை ஒதுவித்து முழுவதுமாக வளர்த்தவன் வசிட்டனே காண்’ என்று அழுத்தம் திருத்தமாக முனிவன் கூறிமுடிக்கின்றான். தாய மனமும் வீரமும் இனி, ஒருவரை ஒருவர் இன்னார் என்று அறியாமல் கண்டதும் காதல் கொண்ட இராமனும், பிராட்டியும் மறுபடியும் ஒருவரை ஒருவர் காணவேண்டம் என்ற அவாவினால் துயருறும் செய்தியைக் கம்பன் விரிவாகப் பாடிச் செல்கிறான். இதில் ஒரு கவிதை, இராகவன் மனம் பண்பாட்டின் சிகரம் என்பதை அறிவுறுத்த உதவுகிறது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/302
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை