பிராட்டியும் இராமனும் ேே 283 "ஆகும்.நல்வழி; அல்வழி என் மனம் ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம், பாகுபோல் மொழிப்பைந்தொடி, கன்னியே ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!" (626) முன்பின் தெரியாத இவள் கன்னியோ மணமானவளோ என்ற ஐயம் தோன்றியவுடன் அல்வழி என்மனம் செல்லாது; இவள் கன்னியே என்ற முடிவுக்கு வந்ததால் இராமனை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறான் கவிஞன். இத்தகைய பண்பாளன் ஆற்றலிலும், வீரத்திலும் யாவரினும் மேம்பட்டவன் என்பதனைக் கூற இராமன் வில்லை எடுத்து ஒடித்த பகுதியைப் பயன்படுத்திக் கொள்கிறான். “தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண்நுதி வைத்ததும் நோக்கார், கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்” - கம்ப. 699 சீதையின் கலக்கம் வில்லை ஒடித்த செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சீதையின் மனத்தில் கலக்கம் ஏற்படுகிறது. தான் காதலித்தவன் தான் வில்லை ஒடித்தான் என்பதைக் கண்ணால் கண்டறிய வாய்ப்பில்லாமல் அவள் வேறோர் இடத்தில் இருந்து விட்டாள்; ஒடித்தவனும் தன் காதலனும் வெவ்வேறானவராக இருந்துவிட்டால் என்று நினைக்கும்பொழுதே நெஞ்சம் பதறுகிறது. பிராட்டியின் படபடப்பை அடக்க நீலமாலை என்பவள் ஓடிவந்து மகிழ்ச்சி மிகுதி காரணமாகத் தலைவியை வணங்காமல் ஆடிப்பாடி நிற்கின்றாள். ஒரு வகையாகத் தசரதன் பிள்ளைகள் என்று தொடங்கி இராமனை வருணிக்கும் வரை சீதையின் மனம் இருப்புக் கொள்ளவில்லை. தன்னால் காதலிக்கப்பட்டவன் தசரதன் மகன் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? அது
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/303
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை