284 38 இராமன் - பன்முக நோக்கில் தெரிகின்ற வரையில் அவள் மன உளைச்சலை யார் போக்க முடியும்? மூன்று பாடல்களில் வில்லை ஒடித்தவன்பற்றி கூறிக்கொண்டு வருகிறாள் நீலமாலை. பிராட்டியின் செவிகளில் அந்தப் புகழ்ச்சிப்படலம் ஏறவே இல்லை. இத்தனைக்கும் உரியவன் தான் பார்த்தவன்தானா என்பதை அறியத் துடிக்கும் அவளுக்கு நான்காவது பாடலின் நான்காவது அடியில் விடை கிடைக்கிறது. CCCS S CCCC SS S CCCCCC SCCCCS CCS இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் பராவஅரு முனியொடும், பதிவந்து எய்தினான்" - கம்ப 724 என்று கூறியவுடன்தான் சீதையின் மனம் அமைதி பெற்றது. பின் இரண்டு பாடல்களில் வில்லை ஒடித்த முறையைப் பேசுகிறாள் நீலமாலை. 'பராவஅரு முனியொடும் பதிவந்து எய்தினான்' என்பதைக் கேட்டவுடன் தன்ஐயம் நீங்கி மகிழ்ச்சிக் கடலில் புகுந்தவள் மனத்தில் மற்றொரு ஐயம் தோன்றி மறைந்திருக்கும். முனியுடன் வந்த காதலன் வில்லை வளைத்தால்தானே தான் அவனை அடைய முடியும் என்ற சீதையின் ஐயத்தைப் போக்குபவள் போல நீலமாலை இரண்டு பாடல்களில் (725, 725 வில்லொடித்த கதையை விளக்கினாள். பிராட்டியின் ஐயம் தீர்ந்து விட்டது. என்றாலும், பெண்களுக்கே உரிய முறையில் ஒரு சிறு ஐயம் இருந்திருக்கும்போலும்! மணப்பந்தருக்கு வந்தபொழுது மனத்தில் உள்ள கடு களவு சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளுவதற்காக கை வளை திருத்துபு, கடைக்கணின் உணர்ந்தாள்' என்கிறான் கவிஞன். அதாவது, கையிலுள்ள வளையல் வரிசையைச் சரிசெய்யத் தலைசாய்ப்பது போல் ஒரு வகையாகக் கடைக்கண்ணால் பார்த்துத் தெரிந்துகொண்டாள். அரசவீதியில் தான் கண்டு மனம் பறிகொடுத்த அவனேதான் தன் கைப்பிடிக்க வருகின்றான் என்று உணர்ந்தவுடன் அவள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கலானாள்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/304
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை