286 38 இராமன் - பன்முக நோக்கில் விசுவாமித்திரன் இராமனை அழைத்துச் சென்றான்? அவதார நோக்கத்தில் பிராட்டியை இராகவன் மணம்புரிய வேண்டியது இன்றியமையாத காரியம். தசரதனை விட்டுப் பிரிய முடியாதவன் வசிட்டன்; அவன் இதனைச் செய்ய முடியாது. எனவே, விசுவாமித்திரன் அங்கே செல்லுகிறான். உருள்பெருந் தேர்க்குக் கண்ணுக்குத் தெரியாத கடையாணி செய்யும் மாபெரும் பணியைப் போன்று இராமனுடைய அவதாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு ஏற்ப மிக இன்றியமையாத நடைமுறைகளை இந்த முனிபுங்கவர்கள் காதும் காதும் வைத்தாற்போல் செய்துவிட்டு அகன்றுவிடுகிறார்கள். வருந்தலை நீ சுமித் திரையின் மாளிகையில் இராமன் இருக்கின்றபோதே சிற்றன்னை அனுப்பிய மரவுரி வந்ததாகலின் அதனை ப் புனைந்து கொண்டபின் சுமித்திரையிடம் விடைபெற்றுக் கொண்டு சோதரர் இருவரும் சீதையின் மாளிகை செல்கின்றனர். நகர் முழுவதும் பெரிய பெருமாளும் இளைய பெருமாளும் வனஞ் செல்ல முடிவு செய்து விட்டனர் என்ற செய்தி பரவிவிட்டதால் பெருங்கூட்டம் அழுதுகொண்டே இராமனைச் சுற்றி வருகிறது. இந்த நிலையில்தான் சீதையைச் சென்று பார்க்கிறான் இராமன். அரைகுறையாக செய்தி அறிந்தவளாதலால் கணவனும் இளைய கோவும் வழக்கமாகத் தரிக்கும் பீதாம்பர ஆடையைத் தவிர்த்து, மரவுரியுடன் வருவதைக் கண்டு துணுக்குற்றாள். நடந்ததை முழுதும் அறியாத சீதை மாமியர் இருவரும் தன்னைக் கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்து ஒன்றும் புரியாதவளாய் இதற்கு விளக்கம் கேட்பவள்போல இராமனை நோக்கினாள். (1820) மிக அழகாக நடைபெற்றவற்றை மும்மூன்று சொற்களில் விளக்குகிறான் இராகவன். “பொரு இல் எம்பி புவிபுரப்பான்; புகழ் இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய், கல்கடங்கண்டு நான் வருவென் ஈண்டு; வருந்தலை நீ" என்று கூறி முடித்தான். (1822) காடு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/306
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை