பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ேே 287 என்று சொல்லாமல், கருவி மாமழைக் கல்தடம் என்றும் பதினாலு ஆண்டுகள் கானக வாழ்வு என்று சொல்லாமல் 'கல்தடம் கண்டு ஈண்டு வருவென்' என்றும் வருந்தலை நீ என்றும் இராகவன் பேசியதன் நோக்கம், பிராட்டியின் மனத்தில் துயரம் தோன்றக் கூடாது என்பதுதான். அவன் கூறுவதைப் பார்த்தால், ஏதோ வேற்றுாருக்கு இரண்டு மூன்றுநாள் பயணம் செய்துவிட்டு வருகிறேன் என்பது போல அமைந்திருந்தலைக் காணலாம். உடனே பிராட்டி தேம்பத் தொடங்கினாள். நாயகன் வனம் செல்கிறான் என்பதற்கோ, நாட்டை இழந்தான் என்பதற்கோ அவள் துயரமடையவில்லை. நீங்குபவன் யான் என்ற சொற்கள்தாம் அவளைச் சுட்டன. (1823). "தாயும், தந்தையும் ஏவியதை மைந்தன் கடைப்பிடிப்பது நியாயமே என்று நினைத்தவள், ‘என்னை ஏன் இங்கேயே இரு என்று கூறுகிறான்” என்று நினைத்தவுடன் அவள் துயரம் பெரிதாகிறது. (1825) 'பிரிவினும் சுடுமோ! அவள் துயரத்தைத் தணிக்கக் கருதிய இராகவன், 'அனலிடைப்பட்ட அரக்குப் போல் கொதிக்கின்ற கானகம் உன் மெல்லிய பாதங்களுக்கு ஏற்றவை அல்ல' என்கிறான். அதனைக் கேட்ட பிராட்டி, "உன் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு’ (1827) என்று ஒரே வரியில் இராமன் வாயை அடைத்துவிடுகிறாள். இத்துடன் நில்லாமல் உள்ளே சென்ற பெருமாட்டி மரவுரி தரித்து, அவன் பக்கத்தில் வந்து நின்று யானையின் துதிக்கை போன்று நீண்டு தொங்கும் அவன் கரங்களைப் பற்றிக் கொண்டான். சொன்னது நீதானா? இந்த நிலையில் சீதையைப் பார்த்து அவள் கணவன் சொன்ன ஒரு சொற்றொடர் நினைக்கற்பாலதாகும். அச்சொற்கள் வருமாறு: