பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ேே 289 அவன் வந்த காரியத்தை நினைவூட்டுவதற்காக மூல இராமன் சூர்ப்பனகையை அனுப்பினான். அவளைப் பார்த்தவுடனேயே இவள் நல்லதிற்கு வரவில்லை என்ற எண்ணம் தசரதராமனுக்குத் தோன்றவே, தீது இல் வரவு ஆக நின் வரவு' என்றான். அவனையுமறியாமல் நல்வரவு' என்று கூறுவதற்கு பதிலாகத் தீது இல்லாத வரவாக இருக்கட்டும் என்று சொற்கள் வெளிப்பட்டதால், அவள் வரவு தீது உடைய வரவாகவே முடிந்துவிட்டது. அவளைப் பற்றிய விவரங்களை இராமன் கேட்டு அறியத் தொடங்குகையில் சாலையை விட்டுப் பிராட்டி வெளியே வருகிறாள். பிராட்டியின் அழகைக் கண்டு திகைத்து நின்று விட்டவளாகிய சூர்ப்பனகை சிந்திக்கத் தொடங்குகிறாள். “மானுடர் முதல் மூவர்வரை உள்ள கூட்டங்களில் இத்தகைய அழகிய பெண்ணைக் கண்டதில்லை. படைப்பவன் தன் படைப்பின் ஆற்றல் முழுவதையும், தன் திறத்தையும் காட்ட ஒர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழகின் எல்லையாகப் படைத்து விட்டிருக்கின்றான். அவ்விருவரும் இவர்களே ஆவர். இத்தனை அழகுடைய இவள் இவன் மனைவியாக இருக்கலாமோ என்றால், அரசகுமாரர்கள் மனைவியரை அழைத்துக்கொண்டு வனத்திடை வருவதில்லை. எனவே, இந்த அழகியும் என்னைப் போலவே இவனைக் காமுற்று, என்னைப் போலவே இடையில் வந்தவள்’ என்று முடிவு செய்து விட்டாள். (2793). உடனே இராமன் மேல் பெரும் பரிவு கொண்டவள் போல, "வீரனே! ஊன் நுகர்ந்து உண்ணும் அரக்கரைச் சேர்ந்தவள் இவள். உன்னை ஏமாற்றி உன் பின் வந்துவிட்டாள். உடனே அவளை விரட்டிவிடு” என்று கூறினாள். (2794) அதுகேட்டுக் கடகடவெனச் சிரித்த இராமன், "அறிவின் மிக்கவளே! என்னுடன் நிற்கும் இவள் அரக்கி என்று கண்டுபிடித்துச் சொல்லிய உன் அறிவுத் திறத்தைப் புகழாமல் இருக்க முடியவில்லை" என்று கேலியாகக் கூற, அதை உண்மை என்று நம்பிவிட்டாள், அ-19