கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 13 பின் இலக்கியக் குறிப்புகள் சங்கப் பாடல்களை அடுத்து வந்த இலக்கியங்களில் இக்குறை நீக்கப் பெற்றதையும் அறிய முடிகிறது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று துணியப்பெறும் சிலப்பதி காரம். இராமகாதையின் மிக இன்றியமையாத இரண்டு நிகழ்ச்சிகளை ஒரளவு விரிவாகவே கூறுகிறது. இராமன் தன் தந்தையாகிய தசரதன் ஆணையின் பேரிலேயே மனைவியுடன் காடு சென்றான். அக் காடுறை வாழ்க்கையில் மனைவியை இழந்து பெருந்துயர் உழந்தான் என்ற செய்தியைச் சிலப்பதி காரம் கூறுகின்றது. அவ்வாறு கூறும்பொழுது முதநூலாகிய வான்மீகத்திற்கு மாறுபட்டு, இராமன் திருமாலின் அவதாரம் என்ற கருத்தையும் கூறுகிறது. 'தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? - ஊர்காண்-46-49 (தாதை - தசரதன் மாது - சீதை வேத முதல்வன் - நான்முகன்; பயந்தோன் - அவனை நாபிக் கமலத்தில் பெற்ற திருமால் நெடுமொழி - பழங்கதை.) திருமால் அவதாரம் என்ற குறிப்பு இராமன் தந்தை ஏவலில் காடு சென்று மனைவியை இழந்த கதையை, நெடுமொழி என்ற சிலம்பு கூறுமேயானால், இராமகாதை பல்லாயிரம் ஆண்டுகளாக இத் தமிழ் நாட்டில் வழங்கிற்று என்று கருதுவதில் தவறு இல்லை. சங்கப் பாட்டில் வரும் குறிப்புகளில் காணாத செய்தி, இராமன், வேத முதல்வனைப் பயந்தவன் என்பதாகும். எனவே, இராமன் திருமாலின் அவதாரம் என்ற செய்தியும் இத் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பழைய செய்தி என்றே தெளிய வேண்டியுள்ளது. பிற்காலத்தில் கம்பநாடான் திருமால்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை