290 38 இராமன் - பன்முக நோக்கில் காமவெறியில் கட்டுண்ட சூர்ப்பனகை. அவள் பேச்சைக் கேட்ட பிராட்டி பயந்து நடுங்கி, இராகவன் தோள்களைப் பற்றிக்கொள்ள, சூர்ப்பனகை சீதையை நேரடியாகப் பார்த்து, "நானும் இராமனும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அரக்கியே! நீ இடையே வந்த காரணமென்ன?” என்று பேசினாள். இந்த விளையாட்டு இன்னும் வளர்ந்தால் தீங்கு பயக்கும் என்று கருதிய இராகவன், "வெளியில் இருக்கும் என் தம்பி உன்னைக் கண்டால் சும்மா இருக்க மாட்டான், ஒடிவிடு" என்று எச்சரிக்கை செய்தான். இலக்குவனால் அங்கங்கள் அரியப் பெற்ற சூர்ப்பனகை, "உங்களை அழிப்பதற்கு எமனை அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு, கர துடணர்களை அனுப்புகிறாள். கர துண்டனர்கள் அழிந்த பிறகு சூர்ப்பனகை சூழ்ச்சி செய்து பிராட்டியைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தை இராவணன் மனத்தில் விதைத்தாள். இராவணன் சிந்தனை செய்யத் தொடங்குகிறான். கேவலம் இரண்டு மனிதர்கள், ! ஒரு மானுடப் பெண் என்ற எண்ணத்தில் " நீ ஏன் கர, துடனர்களிடம் நிலைமையைக் கூறவில்லை?” என்று கேட்டான். அப்படிக் கேட்ட இராவணனுக்கு, "கர, துடனர்கள் மாபெரும் படையுடன் வந்து போரிட்டனர்" என்றாள். அவன் கேட்காமலேயே போரின் முடிவு பற்றிச் சொல்ல வந்த அவள், “வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்" என்று அவள் பதிலிறுத்தவுடன், இலங்கேசுவரன் அதிர்ந்துவிட்டான். ஒரு மனிதன், வேறு துணையின்றிப் பெரும் படையையும், திரிசிராவையும் துரடணனையும் கரனையும் கூட விண்ணில் ஏற்றி விட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் தான் நினைக்கும் அற்ப மனிதர்கள் அல்லர் இவர்கள் என்ற எண்ணம் இராவணனிடம் உறுதிப்பட்டு விட்டது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் மாரீசனை நாடினான். r சூர்ப்பனகை இராம கதையில் அரங்கேறியதன் விளைவு பெருமானைப் பிராட்டி பிரிந்திட நேர்ந்ததாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/310
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை