பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 % இராமன் - பன்முக நோக்கில் அண்டங்கள் அனைத்தும் தாறுமாறாகி உடைபட்டுவிடும் அல்லவோ?” (3326) "அன்னையே! திரிபுரம் எரித்த சிவபிரானின் வில் உங்க்ள் தலைவன் கை பட்டவுடன் இற்று முறிந்ததைத் தாங்கள் அறிய வில்லையா? அவனுடைய ஆற்றலுக்கு இன்னும் விளக்கம் தேவையா?” (3327) “தாங்கள் கருதிய படி காவலனுக்கு ஒர் ஆபத்து வருமேயானால் மூன்று உலகங்களும் தேவர்களும் முனிவர்களும் ஒருவரும் எஞ்சாது ஒழிவர்.” (3328) 'அண்ணனின் அம்பால் அடிபட்ட அரக்கன் இறக்குத்தறுவாயில் அண்ணன் குரலில் அலறிய சப்தத்தை தான் நீங்கள் கேட்டீர்கள். இது பற்றிய கவலை விட்டொழியுங்கள்” (3329) என்று தருக்க வகையாலும், சுருதி, யுக்தி, அனுமானம் என்ற மூவகைப் பிரமாணங்களுடனும் இத்துணை நேரம் இலக்குவன் பேசிய அத்தனை வாதங்களும் பிராட்டியின் செவியில் ஏறவே இல்லை. . ஒரு தடை - அதற்கு விடை தசரதராமனிடம், மூல இராமன் உள்ளே இருந்து தேவைப்பட்டபொழுது வழிகாட்டுவதுபோல், சனகன் மகளாகிய சானகியிடம் மூலத்திருமகள் உள்ளே இருந்து வழிகாட்ட வில்லையோ என்றும் நினைக்கலாம். அல்லாமலும், இப்பொழுது இலக்குவன் பிரிந்தால் ஒழியப் பிராட்டி சிறை எடுக்கப்படமுடியாது. அவள் சிறைப்பட்டாலொழிய அவதார நோக்கம் நிறைவேறாது. இதைவிட நுணுக்கமான ஒரு கருத்தும் இதனுள் அடங்கி உள்ளது. விசுவாமித்திரன் முதல் அத்தனை முனிவர்களும் அரக்கர் கொடுமை பற்றி இராமனிடம் வேண்டிக் கொண்டார்கள். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டு இராவணன்மேல் இராகவன் படைஎடுக்க முடியும், அற அடிப்படையில் வாழும் இராமன் எவ்விதக் காரணமும்