பிராட்டியும் இராமனும் ேே 293 இல்லாமல் எப்படி இராவணன்மேல் படை எடுப்பது. முனிவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு இராவணன் கட்டுப்படவில்லை. காரணம், இராவணன் நேரிடையாக எந்த முனிவனுக்கும் தீங்கிழைக்கவில்லை. அவன்கீழ்ப் பணிபுரியும் கரன் முதலிய அரக்கர்கள் முனிவர்கள் வேள்வியை அழித்தால் தாடகையைக் கொன்றதுபோல் அவர்களையும் அழிப்பது திண்ணம். தேவர்களுக்கு இராவணன் இடுக்கண் செய்தான் என்பது உண்மையாக இருக்கலாம். எந்தத் தேவனும் இராமனிடம் வந்து உதவிகேட்க வில்லையே. இப்படியிருக்க, இராவணன் மேல் படையெடுப்பது ஒருவகையான வலுச்சண்டைதானே. அப்படியானால் இராமனுக்கு நேரிடையாக இராவணன் தீங்கு செய்யவேண்டும். அதற்கு அந்த ஒரே வழிதான் இருந்தது. ஆதலின் தேவர்கள் கடைப்பிடித்த ஒரு வகைத் தந்திரமே ஆகும் இது. இராவணனை அழிப்பதற்காகவே திருஅவதாரம் செய்தவன் இராமன் என்றாலும், உலகத்தில் மனிதனாகப் பிறந்து விட்ட பிறகு, உலகத்து நடைமுறையில் உள்ள அறவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவன் கடமை ஆகின்றது. தக்க காரணம் இன்றி ஒருவன்மேல் போர்தொடுத்தல் அறம் அன்று. ஆதலால், தேவர்கள் காரணத்தைக் கற்பிக்கின்றனர். திருமணமான சில நாட்களிலேயே தன் கணவன் எதிரே அகில உலகமும் கண்டு நடுங்கும் பரசுராமன் பட்ட பாட்டைப் பிராட்டி பார்த்துக்கொண்டு இருந்தவள்தானே! கரனுடன் வந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களையும் கடிகை மூன்றில் விண்ணில் ஏற்றியவன்தானே! அதையும் நேரில் கண்ட பிராட்டி இப்பொழுது ஒரு மானின் பின் சென்றவன் எப்படித் துன்பமடைய முடியும் என்று சிந்தித்திருக்க வேண்டும். எத்தனையோ காரணங்களைக் காட்டி இலக்குவன் எடுத்துக் கூறியும் அதைச் செவிமடுக்காதது ஏன் இதுபோன்ற சந்தர்ப்பம் ஒன்று முன்னர் ஏற்பட்டபோது கம்பன் கூறிய சமாதானத்தை நினைவுக்குக் கொண்டுவருவது நலம். துமொழி மடமான் ஆகிய கைகேயி மனந் திரிந்ததற்குக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/313
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை