பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ேே 295 மின்உயிர்த்து உருமின் சீறும் வெங்கனை விரவாமுன்னம், உன் உயிர்க்கு உறுதி நோக்கி, ஒளித்தியால் ஒடி'என்றாள்" - கம்ப 3386 "வாக்கினால் அன்னான் சொல்ல, மாயையால் வஞ்சமான் ஒன்று. ஆக்கினாய் ஆக்கி, உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய், புகுந்து கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக் - கம்ப 3399 பிராட்டி பேசியவற்றில் முதல் இரண்டு பாடல்களும் தன் எதிரில் வந்து நிற்கும் துறவி யார் என்று அறியாமல் அரக்கர் சிறப்பை ஏதோ ஒரு துறவி கூறினான் என்று மனத்துட்கொண்டு இராகவன் பெருமையை அவனறியுமாறு சொல்லியதாகும். பின்னர்க் காட்டப்பெற்ற பாடல்கள் அனைத்தும் அவனை இன்னான் என்று இனம் கண்டு கொண்ட பிறகு பேசிய பேச்சுக்களாகும். இராகவனுக்குப் பேராபத்து நிகழ்ந்துவிட்டது என்று சீதை சொன்னவுடன், இராகவன் யார் என்று விரிவாக எடுத்துக் கூறிய இலக்குவனை அனுப்பிய பிறகு அரை நாழிகைப் பொழுதில் இராவண சந்நியாசி வர அவனுடன் பிராட்டி பேசிய பேச்சுக்கள் மேலே தரப்பட்டுள்ளன. இவ்வளவு விவரம் தெரிந்தவள் அரை நாழிகைக்கு முன்னர் இந்த விவரங்களையெல்லாம் மறந்துவிட்டு, இலக்குவன் நோகும்படிப் பேசி அவனை அனுப்புவாளா? ஆனால், அனுப்பியதென்னவோ உண்மை. இந்த விவரங்களை எப்படி மறந்தாள்? மறக்கச் செய்தது அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும் ஆகும்.