, 296 36 இராமன் - பன்முக நோக்கில் பிராட்டி பிரிவால் பெருந்துயர் உழக்கும் பெருமாள் இலக்குவன் துணை சடாயுவைச் சந்தித்ததிலிருந்து போர் தொடங்குகிறவரை தசரதராமன், மனைவியை இழந்த துயரக்கடலில் கிடந்து, அதன் எல்லைக்கே பலமுறை சென்று விடுவதைக் காண்கின்றோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் தேவர்களும், முனிவர்களும் ட அவன் துயரத்தின் எல்லையைக் கண்டு அஞ்சி ஒதுங்கி விடுகின்றனர். இலக்குவனிடம் இதுவரை காணாது இருந்த புதிய பரிமாணத்தை காண முடிகிறது. இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் சமதிருஷ்டி உடைய ஸ்திதப்பிரக்ஞனான இராமனே அவலக் கடலில் அழுந்தினால் யார் அவனைக் காப்பது? இத்தகைய நேரங்களில் இளையவன் புறப்படுகிறான். ஆம்! என் சொற்கடந்தால் உனக்கு ஆவது என்' என்று இராமன் கூறியவுடன் விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் என்று சொல்லிக் கொண்டிருந்த இலக்குவன் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டதைக் கண்டோம். இடையில் பரதனைப் பற்றி இரண்டொரு தவறான வார்த்தைகளைச் சொல்ல, இராமனால் கண்டிக்கப்பட்டு மனம் மாறியவன் இலக்குவன். அயோத்தியில் இருந்து புறப்பட்டது முதல் பிராட்டி பிரியும்வரை எதிரொன்றும் பேசாமல் அடியனாய் நடந்துகொண்டிருந்த இலக்குவன் இப்பொழுது முன்னவன் துயரத்தால் குன்றி நிற்கும் நிலையில், அடியரின் ஏவல் செய்த இலக்குவன் மால் என வளர்ந்து ஓங்கிவிடுகின்றான். பரம்பொருளின் சொரூபம் என்று அறிந்துகொண்டு எந்த அண்ணனுக்குப் பணிபுரிந்தானோ அந்த அண்ணனை இப்பொழுது குழந்தையாகக் காண்கிறான். கையில் உள்ள விளையாட்டுப் பொம்மை பறிபோனவுடன் குழந்தை வீறிட்டு அழுது ஒய்வது போல இராகவன் நைந்து நைந்து உருகுகின்றான். அழும் குழந்தையை எடுத்து அணைக்கும் பெற்றோர் போல இளைய பெருமாள், பெரிய பெருமாளைப் பலபடியான சொற்களால் தேற்றுகின்ற காட்சி வியப்பைத்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/316
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை