பிராட்டியும் இராமனும் 38 297 தருவதாகும். இறைவரோ தொண்டர் உள்ளத்து அடக்கம் என்ற ஒளவையின் பாட்டுப்படி பரம்பொருளாகிய இராகவன், பரம பாகவதனாகிய இலக்குவனின் சொற்களுக்குள் அடங்கிவிடுகிறான். தேவியைப் பிரிந்து தேவதேவன் தேம்பினால், அந்தக் கொடிய சூழலில்பகவானுக்கே பாகவதன் விழுதாக விளங்கித் தாங்குவான் போலும்! பிராட்டியின் பிரிவுத் துன்பம் அடுத்து நாம் பிராட்டியை ச் சந்திப்பது அசோகவனத்திலாம். அரக்கியர் குழாத்திடை வைகும் வைதேகி மனம் முறிந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதிருக்கப் பேருதவி புரிந்தவள் திரிசடை என்னும் அறிவுமிக்க வீடணன் மகளாவாள். அரக்கியர் நெருக்கலும் இராவணன் எதிரே நின்று செய்யும் புலம்பலும் இல்லாத பொழுதெல்லாம் பிராட்டி இராமனைப் பிரிகின்ற வரை தன் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் வரிசைப்படுத்தி நினைந்து பார்க்கிறாள். பொறுத்துப் பார்த்து, இராமன் வரவில்லை, வரமாட்டான் என்ற முடிவிற்குத் தள்ளப்படும் நிலையில் அவள் உள்ளத்தில் தோன்றும் நினைவுகளாகும் இவை: முதலாவது எண்ணம், தான் இருக்கும் இடத்தை இராமன் அறிய முடியாது என்பதுதான். "சடாயுவோ இறந்து போய்விட்டான். இந்நிலையில் யார் என் நிலை எடுத்துச் சொல்வார்கள்? இப்பிறப்பில் இராமனைக் காணமுடியாது”. “அவசரப்பட்டு நான் ஆராயாமல் இளையவனைக் கோபித்துக்கொண்டு சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு இவள் அறிவில்லாதவள் என்று என்னைத் துறந்து விட்டானோ? எனது பிராரத்துவ வினை இத்துடன் முடிந்து விட்டது போலும்! நான் இல்லாத இப்பொழுது மென்மையான கீரைகளையும், கிழங்கு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/317
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை