298 38 இராமன் - பன்முக நோக்கில் முதலியவற்றையும் யார் என் தலைவனுக்கு இடப்போகிறார்கள்? இந்நிலையில் யாரேனும் விருந்தினர் வந்துவிட்டால் நான் இல்லையே என்று நினைப்பான்” என்று நினைத்து விம்மத் தொடங்கினாள். 'கொடிய அரக்கர்கள் இத்தனை காலம் என்னை விட்டு வைக்க மாட்டார்கள், கொன்று தின்றிருப்பர், இனிச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது என்று நினைத்து வராமல் இருந்துவிட்டான் போலும் இரகு குலத்திற்கே உரிய பொறுமை என்னும் சிறப்பியல்பு தனக்கும் உரியது என்று இருந்துவிட்டானோ?” "தாயரும் தம்பியும் ஒருவேளை காட்டிற்கு வந்து அழைத்துச் சென்று விட்டார்களோ? இல்லை, இல்லை. குறிப்பிட்ட பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலன்றி மீட்டும் நகர் புகான்." (50.80 - 5085) - இராமன் வருவான், வரமாட்டான் என்ற இரு துருவ நினைவுகளிடையே அல்லற்பட்ட போதுகூட தன் விரதத்தை மீறிப் பதினான்கு ஆண்டுகள் கழியாமல் அயோத்தி திரும்ப மாட்டான் என இராமன் பால் தான் கொண்ட நம்பிக்கையைச் சீதை விடவில்லை என்பத நம் கவனத்துக்கு உரியது. இனிமை ஊட்டும் பழைய நினைவுகள் மேலே கண்ட முறையில் வருவான், மாட்டான் என்ற இரண்டு எண்ணங்கட்கும் இடைப்பட்டுத் துடித்த பிராட்டி இப்பொழுது, ஆற அமர இருந்துகொண்டு, இராமனும் தானும் ஒன்றாக இருந்தபொழுது நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்து அசைபோடத் துவங்குகிறாள். - "கேகயர்கோன் மடந்தை, இராமா! இந்தக் கோசல நாடு உன் தம்பிக்கு உரியதாயிற்று என்று கூறியவுடன் வியப்போ, சினமோ, வெறுப்போ கொள்ளாமல் இந்த வாசகத்தைக் கேட்குமுன் இருந்த முகஅழகைக் காட்டிலும் மூன்று மடங்கு பொலிந்ததை நினைக்கின்றாள்' (508:)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/318
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை