பிராட்டியும் இராமனும் 38 299 "இந்த அரசு உனக்குரியது என்று தந்தை சொன்ன போதிலும், இந்த அரச செல்வத்தைத் துறந்து நீ காடு செல்க என்று பணித்த போதும் முகத்தில் எவ்வித மாறுபாடும் காட்டாமல், சித்திரத்தில் எழுதப்பட்ட செந்தாமரை மலர்வதும், கூம்புவதும் இல்லாமல் ஒருபடித்தாய் இருப்பது போன்ற அவன் முகத்தை நினைந்தாள்". (5088) "சிவபெருமானுடைய வில்லை வளைக்கத் தொடங்கி, அது ஒடிந்து விழுந்தபோது பருத்துக் காணப்பட்ட அவன் தோள்களைக் கற்பனை செய்கிறாள்". (5089) இந்த மூன்று பாடல்களும் அவள் கண்ணால் காணாத பொழுது நடைபெற்ற நிகழ்ச்சிகளேனும், அதைக் கற்பனையில் காண்கிறாள். "அழகான கங்கை நதியில் ஒடத்தைச் செலுத்திச் சென்ற ஏழை வேடனாகிய குகனைப் பார்த்து எல்லையற்ற கருணையோடு நான் உன் தோழன், இவள் உன் கொழுந்தி, இதோ இவன் உன் தம்பி என்று கூறிய எல்லையற்ற நண்பின் வெளிப்பாட்டை நினைந்து விம்மினாள்." (509) "வனத்திடை வந்த பரதன் அவனுக்குரித்தான பொன் முடியை அணியாமல் சடையைத் துரக்கிக் கட்டிக்கொண்டு துறவியாக வந்து நின்றவனைக் கட்டிக்கொண்டு, கண்ணிர் சொரிந்ததை நினைக்கின்றாள்." (5093) "இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று அவர்கள் குருதியில் மூழ்கிய பரசுராமனின் மாபெரும் தவத்தையும், அவன் கொணர்ந்த வில்லையும் வளைத்துத் தவத்தைப் போக்கியதை நினைந்து வருந்தினாள்". (5095) இந்த வருத்தம் இனிய நினைவிலே விளைந்த துன்பம் என்பதை உணரவேண்டும். இளமை மிடுக்கை நினையும் இன்பத்திலே முதுமை இனி நினைந்து இரக்கம் ஆகின்று' என வருந்துவதைப் போன்றது அசோகவனத்துச் சீதையின் நினைவு)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/319
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை