14 36. இராமன் - பன்முக நோக்கில் அவதாரமாக இராமனைக் கூறக் காரணமாக இருந்தவர்கள் ஆழ்வார்களே என்று சிலர் கூறக் கேட்கிறோம். அந்த வாதம் ஊற்றம் இல்லாததாகும். ஏன் எனில், முதல் ஆழ்வார்கள் தோன்றுவதற்கு ஐந்நூறு ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய சிலப்பதிகாரம், இராமன் திருமாலின் அவதாரமென்ற கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. இராமகாதையில் முக்கியமான நிகழ்ச்சி இராவண வத மாகும். அதையும் சிலப்பதிகாரம் பேசுகிறது, மூஉலகும் ஈர் அடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சே அடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோ அரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே? - ஆய்ச்சியர் குரவை (ார் அடி - இரண்டு கால்களால் நிரம்பாவகை - மாவவி கொடுத்த மூன்றடி மண் என்ற அளவில் குறைவுபடும்படி தாவிய சேவடி - ஆகாயத்தில் நீட்டிய சிவந்த அடி சேப்ப - காட்டில் நடப்பதால் சிவந்து தோன்ற சோ அரண் - சோ என்ற அரண்.) அரசனை இறை என்ற சொல்லால் குறிப்பதும், அவன் உறையும் இடத்தைக் கோயில் என்று அந் நாட்களில் குறித்ததும் அரசர்களைத் திருமாலின் அவதாரமென்று கருதும் கொள்கை சங்ககாலத்திலிருந்தே வருகிறது என்று துணிய உதவுகின்றன. சங்ககாலத்தை அடுத்துள்ள காலத்திலும், இக் கொள்கை வலுப்பெற்றது என்றே கருதவேண்டியுள்ளது. இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கிடை - பெரும்பாண் 29-30 (வாமனாவதாரத்தில் பெரிய பூமியை ஒரடியால் அளந்து கடந்தவனும், திருவாகிய மறுவை மார்பில் உடையவனும், கடல்நிற வண்ணமுடையவனுமாகிய திருமாவின் வழித் தோன்றல் (பிறங்கிடை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை