பிராட்டியும் இராமனும் ேே 30| வந்தான் தூதுவன் இதுவரை அவள் மனத்திரையில் ஒடிய நிகழ்ச்சிகள் அவளுக்கு மனத்தெம்பைத் தருவதற்குப் பதிலாகத் துன்ப முடிவுக்கே சீதையை விரட்டின. இனிமேல் தனக்கு உய்கதியே இல்லை, தன்னைக் காக்க வருவார் யாரும் இல்லை. எனவே, துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்வதைவிட ஒரேயடியாக இறத்தலே நல்லது என்ற முடிவுக்கு வந்தாள். இந்நிலையில், அனுமன் வருவதும், தான் அரக்கன் அல்லன் - இராகவன் தூதனாகிய மாருதி என்ற எண்ணம் அவள் மனத்தில தோன்றுமாறும் செய்தான். பிராட்டி பிரிந்ததில் இருந்து நடைபெற்றவற்றையெல்லாம் முறையாகக் கூறினான். இராகவன் தந்த அடையாளத்தைக் காட்டினான். இராகவன் உறுதியாக வந்து அவளை மீட்பான் என்பதையும் வலியுறுத்திக் கூறினான். மேலும் அனுமன் தான் இராகவன் தூதன் என்பதை அவள் நம்புவதற்காக இராமன் கூறி அனுப்பிய சில நிகழ்ச்சிகளைக் கூறினான்: "நான் வனம் சென்ற காலத்தில் தாயருக்குப் பணி செய்துகொண்டு நீ இங்கிருக்கவும் என்று நான் சொன்னவுடன், கட்டிய துணியுடன், பெருமூச்சு விட்டுக்கொண்டு என்னுடன் வருவதற்குத் தயாராக என் பக்கலில் வந்து நின்றதைக் கூறுவாய்." (5287) "அயேத்திமாநகர் வாயில் முதலியவற்றைக் கடந்த உடனேயே காடு எங்கே உள்ளது என்று கேட்டதையும் சொல்லுவாய்” (5288) “வனத்தின் கொடுமையையும், பிரிவின் துயரையும் நினைந்து வருந்திக்கொண்டிருந்த சுமந்திரனிடம் என் கிளிகளையும், மைனாப் பறவைகளையும் நன்கு கவனித்துக்கொள்ளச் சொல் என்று கூறியதைக் கூறுவாய், (5289) - இவற்றைக் கூறி முடித்து இராமனின் கணையாழியையும் காட்ட, பிராட்டி மகிழ்ச்சி, துயரம் என்ற இரண்டும் கலந்த கடலுள் மூழ்கினாள்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/321
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை