பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 38 இராமன் - பன்முக நோக்கில் பெருமானுக்குப் பிராட்டியின் செய்தி இறுதியாக அனுமன் புறப்படுவதற்கு முன் "தலைவனுக்கு "என்ன செய்தி சொல்லுகிறீர்கள்" என்று கேட்டவுடன், தனக்கும் தன் கணவனுக்கும் மட்டும் தெரிந்த சில செய்திகளைப் பிராட்டி சொல்கிறாள்: 1. "நீதி வடிவானவனே! நான் சொல்லப் போவதை மனத்தில் நன்கு பதித்துக் கொள்வாயாக. இன்னும் சரியாக ஒரு மாதம்தான் இங்கிருப்பேன். மன்னன் இராமன்) ஆணையாகச் சொல்கிறேன். அதன் பிறகு நான் வாழப் போவதில்லை". (5373) 2. "மாலை அணிந்த அப்பெருமானுக்கு நான் உகந்த மனைவி அல்லள் என்றாலும், தயை என்று அனைவரும் கூறும் அந்த ஈரஉணர்வு அவன் நெஞ்சில் இல்லையென்றாலும் அவருடைய வீரத்தையாவது நிலைநாட்ட வேண்டும் என்று சொல்வாயாக" (5374) 3. "வெற்றி பொருந்திய இளையபெருமாளுக்கு நான் சொல்லப்போவதைக் கவனமாகச் சொல்வாயாக. மன்னனுடைய ஆணையால் எனைக் காத்து நின்ற இளைய பெருமாள் இப்பொழுதும் அக்காவலை நீட்டிக்கும் முறையில் தன் கையிலுள்ள அம்பைத் தொடுக்க வேண்டும் என்று சொல்." (5375) 4. "இன்னும் ஒரு மாதத்தில் நான் செய்கின்ற தவம் முடிந்துவிடும். ஆதலால் அதன்பிறகு கங்கை ஆற்றின் கரையில் அடியவளாகிய எனக்கு நீர்க்கடன் செய்துவிடுக என்று சொல்வாயாக." (5376) 5. "என்னுடைய மாமியார்கள் மூவருக்கும், நான் உயிர் விடும்போது என் வணக்கத்தைச் செலுத்தினேன் என்று அறத்தின் தலைவனான இராகவன் என்பால் அருள் இல்லாமையால் சொல்ல மறந்துவிட்டாலும் நீ சொல்ல மறந்துவிடாதே." (5377)