304 38 இராமன் - பன்முக நோக்கில் காரியம் ஆகும். இத்தனை மாதங்கள் இங்குத் தங்கியிருந்த நேரத்தில் அரக்கியர் பேச்சுக்கள் மூலமாகவும், திரிசடையின் உரையாடல் மூலமாகவும் இலங்கை வேந்தன் ஆற்றலையும் அவன் படைபலத்தையும், தவ வலிமையையும், இலங்கைக் கோட்டையின் அசைக்க முடியாத கட்டமைப்பையும் கேள்விப்பட்ட ஒரு பெண், திடீரென்று எப்படி நம்பிக்கை கொள்வது? தன் கணவனும், கொழுந்தனும் ஈடு இணையற்ற வீரர்கள் என்பதைப் பெருமாட்டி அறிவாள். ஆயினும், இலங்கைக் கோட்டையையும் அதன் காவலையும் எவ்வாறு அவர்கள் தகர்த்து வரமுடியும். தான் அறிந்த இதனை இராவணன் தன்னை வந்து வணங்கும் பொழுது, இதோ கூறுகிறாள்: "மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏக வேண்டின், ஈர் - எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின், ஆரியன் பகழிவல்லது அறிந்து இருந்து அறிவுஇலதாய்! சீரிய அல்லசொல்லி, தலைபத்தும் சிந்துவாயோ?" - கம்ப. 5185 இத்தகைய எண்ணங்கள் அவளுடைய மனத்தில் தோன்றவும் நம்பிக்கை தளர்கிறது. பொதுவாக மென்மைத்தன்மை உடைய பெண்களுக்கு மன ஊசலாட்டம் இயல்பானதுதான் என்றாலும் தம் தலைவர்கள் வலிமையும் மாற்றான் வலிமையும், தம் தலைவர்களுக்கு வரும் துணை வலியும் சிந்திக்கச் சிந்திக்க அவளுடைய நம்பிக்கை வெகுவேகமாகக் குறைந்து வருகிறது. ஈடுஇணையற்ற இராம -இலக்குவர்களைத் தவிர அவ்வணியில் சுக்கிரீவன், அங்கதன், அனலன், சாம்பன் முதலியவர்களை எந்தக் கணக்கில் வைத்து எண்ணுவது? இங்குள்ள கும்பகர்ணன், இந்திரசித்தன், அதிகாயன், மகரக் கண்ணன் போன்றவர்களை எதிர்க்க அந்த அணியில் யார் இருக்கிறார்கள்: இராவணன் படைகளை எண்ணும்போது சுக்கிரீவனின் குரங்குப் படைகள் எம்மாத்திரம்? பல்வேறு படைக்கலன்களுடன் இந்த அரக்க
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/324
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை