306 38 இராமன் - பன்முக நோக்கில் "திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் இங்கு வந்திலனே எனின், யாணர் நீர்க் கங்கை யாற்றங்கரை, அடியேற்கும், தன் செங்கையால் கடன் செய்க" என்று செப்புவாய். - கம்ப 5376 ஒருமாத காலத்தில் நான் மேற்கொண்டுள்ள தவம் முடிந்துவிடும் என்று சொல்லாமல் முடிந்தது என்று இறந்த காலத்தால் சொல்வதும் வெறும் கால வழுவமைதி என ஒதுக்கிவிடமுடியாது. பிராட்டி பெருமானிடத்துக் கொண்டுள்ள உறுதியை அது புலப்படுத்துகிறது. அப்படி ஒரு மாத காலத்துள் வராவிடின் தான் உயிர் விட்டுவிடுவாள் என்பதைக் குறிப்பிடும் உத்தியும் வலிமையாகத் துலங்குகிறது. 'என்னை இறக்க விட்டுவிட்டு அயோத்திக்குப் போகும் வழியில் கங்கையாறு வருமல்லவா? அந்த ஆற்றங்கரையில் தான் அவர் தம் தந்தைக்கு நீர்க்கடன் செய்தார். அதே இடத்தில் எனக்கும் அதே சடங்கைச் செய்துவிடச் சொல் நம்பிக்கை தளர்ந்துபோய்விட்ட நிலையில் புலம்பும் பெண்மையின் அவலத்தை நிறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல். இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டிய பாடலும் பிராட்டி கூற்றாகக் கவிச்சக்கரவர்த்தியின் முத்திரையோடு விளங்குகிறது. "ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து, தன் மேனியைத் தீண்டலாவது ஒர் தீவினை தீர் வரம் வேண்டினாள் தொழுது" என்று.விளம்புவாய். - கம்ப 5379 இத்துணை வருத்தத்தின் இடையேயும் அவள் கணவன் மேல் கொண்டிருந்த அன்பையும் நம்பிக்கையையும் வெளியிடும் பாடல் இதுவாகும். அவனுடைய ஏகபத்தினி விரதத்தை அவள் தன்னுள் பொன்னேபோல் போற்றி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/326
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை