பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ே 307 வாழ்ந்து வருகிறாள் என்பதை அறிவிக்க இப்பாடல் பயன்படுகிறது. கணவன் மனைவியரிடையேமட்டும் தெரிந்த இதனைச் சொல்வது என்பது, இதனைச் சொல்பவள் உண்மையான சீதைதான் என்று இராகவன் நம்புவதற்காக அல்ல. இராமனுடைய இந்தப் பண்பாட்டில் தன்னை இழந்தவள் ஆதலால் இலங்கையிலேயே இறந்துவிட்டாலும் 'மறுபடியும் பெண்ணாகப் பிறந்து அவனையே அடைய விரும்புகிறேன்' என்று கூறுவதைக் காணலாம். இதற்கு முன்னும் பின்னும் என்பால் அருள் இல்லையாயினும், நெஞ்சில் ஈரம் இல்லையாயினும் என்று கூறியவள் தாயர், பரதன் ஆகியோர் துயரத்தைத் தீர்க்க அயோத்தி போய்விடுவான் கணவன் என்றெல்லாம் கூறுவது தன்னை இன்னும் மீட்க வரவில்லையே என்ற ஆதங்கத்தால் எழுந்த வார்த்தைகளே தவிர உண்மையில் அவள் நம்பிக்கை தளரவில்லை. பரதன் வந்து அழைத்தாலும், குறித்த நாள் வராமல் போகமாட்டான் என்று நம்பிக்கை கொள்கிறாள். (5085) பெரியாழ்வார் பாசுரங்கள் மூலநூலாகிய வான்மீகியில் சயந்தன் கதையை இந்த இடத்தில் சொல்வதாக அமைந்துள்ளது. அது பொருந்தாமை பற்றிக் கம்பம் அதை விட்டுவிடுகிறான். இந்தச் சந்தர்ப்பத்தில், பெரியாழ்வார் பாடி அருளிய பெரிய திருமொழி 3ஆம் பத்தில் அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் என்று வரும் பத்துப் பாடல்களையும் சிந்திப்பது பயனுடையதாகும். அனுமன் தான் யார் என்பதை நிரூபிப்பதற்காக இப்பாடல்களைச் சொன்னான் என்று பத்துப் பாசுரங்களில் பாடிச் செல்கிறார். இதே இடத்தைக் கம்பன் மூன்று பாடல்களில் (5,287 - 5289) பாடுகிறான். வான்மீகியில் பிராட்டி கூறும் அடையாளங்களில் சில பெரியாழ்வார் பாடலில் அனுமன் கூறும் அடையாளங்களாக இடம் பெற்றுள்ளன. இவை இரண்டிலும் காக்கை கதை வருவது