கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 15 - வழித் தோன்றல்) என்று கடியலுரர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பேசுகிறார். அதாவது சோழ மன்னனைத் திருமால் குடியில் தோன்றியவன் என்று கூறுகிறார். திருமால் குடியில் தோன்றிய உரவோன் என்று பாடல் கூறுவதற்கு விளக்கமாக டாக்டர் உ. வே. சா. ஐயரவர்கள், திருமால் என்றது இராமபிரானை என்று எழுதுகிறார்.) சோழ மன்னனைத் திருமால் என்று கூறும் இச் சங்ககாலக் கொள்கை தொடர்ந்து வந்துள்ளது. தொல்காப்பியம் புறத்திணை இயலில், புறத்திணை வழு ஏழைக் கூறும் 5ஆவது சூத்திரத்தில் மாயோன் மேய மன்னபெருஞ் சிறப்பில் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை. என்ற பகுதிக்கு உரையிட்ட நச்சினார்க்கினியர், 'மாயவனுடைய காத்தற் புகழை மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலை என்று கூறிவிட்டு, அதற்கு விளக்கமாக என்றது ஒன்றினை ஒன்றுபோல் கூறுந் துறை என்றும் எழுதுகிறார். இதற்கு மேற்கோளாக இன்ன நூல் என்று இன்று அறியப்பட முடியாத ஒரு நூலிலிருந்து பின்வரும் பாடலையும் எடுத்துக்காட்டுகிறார் : குருந்தம் ஒசித்தஞான்று உண்டால் அதனைக் கறந்தபடி எமக்குக் காட்டாய் - மறம்பெறாப் போரில் குருகுஉறங்கும் பூம்புனல் நீர்நாட மார்பில் கிடந்த மறு - தொல் புறத்திணை - 5 உரை மேற்கோள். (வைக்கோல் போரில் குருகுப்பறவை உறங்கும் நீர் நாடாகிய சோழ நாட்டின் தலைவனே! நீ குருந்த மரத்தை ஒடித்தபொழுது உன் மார்பில் கிடந்த மறுவை எங்ங்ணம் மறைத்துக்கொண்டாய் என்பதனை எனக்குக் கூறுக.) உரையாசிரியர் கூறுவதுபோல் ஒப்புமைப்படுத்திக் கூறாமல், பெரும்பாணாற்றுப் படையும், இந்த மேற்கோள்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை