பிராட்டியும் இராமனும் ேே 3世 புகுந்த குடியையும், பெண் குலத்தையும் உயர்த்தும் வகையில் வாழ்ந்துவருகிறாள் என்றும்,"கற்புக் கடம்போன்ற இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்" யான் கண்டிலேன் என்றும் கூறியவன் அனுமனே. அந்த அனுமன் வந்து சொல்கின்ற வரை பிராட்டி எந்தத் திசையில், எந்த நாட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தவன் இராகவன். அதே இராகவன்தான் இப்பொழுது குற்றம் சாட்டுகிறான். நாக்கூசாமல் ஊண்திறம் உவந்தன்; ஒழுக்கம் பாழ்பட நறவம் மாந்தினை' என்று பேசுகிறான். அதுவும் அனுமனையும், வீடணனையும் எதிரே வைத்துகொண்டு இவ்வாறு பேசினான் என்றால், அது எப்படிப் பொருந்தும்? - ஏன் இது? சாதாரணமான ஒரு சராசரி மனிதன்கூடக் கூற அஞ்சும் இத்தனை பொய்க் குற்றச்சாட்டுகளை தசரதராமன் அடுக்கி அள்ளி வீசினான் என்றால் அது பொருத்தமாகப் படவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது உண்மை என்று கம்பனே பாடுகிறான். அப்படியானால், ஒரே ஒரு முடிவுக்குத்தான் நாம் வரமுடியும். தான் சாட்டும் அத்தனை குற்றங்களும் பொய் என்று தெரிந்திருந்தும் இராகவன் இவ்வாறு பேசுகிறான் என்றால், வேறு ஏதோ ஒரு காரணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசியுள்ளான் என்று நினைப்பதில் தவறில்லை. அது என்ன காரணமாக இருக்கும் என்று நினைப்பதிலும் தவறில்லை. மறுபடியும் மாரீசன் மானாக வந்த நிகழ்ச்சியையும், அங்கே நடந்தவற்றையும் நினைவிற் கொண்டுவருதல் நலம். வந்தது மாயமான் என்றும், அது இயற்கைக்கு விரோதமானது என்றும், அது அரக்கர் சூழ்ச்சி என்றும் அடித்துக் கூறியவன் இளையபெருமாள் ஆவான். அவன் கூறிய எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மிக்க வருத்தத்துடனும், ஒரளவு சினத்துடனும் மான் தனக்கு வேண்டும் என்று
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/331
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை