312 38 இராமன் - பன்முக நோக்கில் பிடிவாதம் பிடித்தாள் பிராட்டி, அது முதல் குற்றம். மான் வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம் என்றால், இலக்குவன் தான் பிடித்துத் தருகிறேன் என்ற பொழுது, நாயக! நீயே பற்றித் தருகலை என்று பிடிவாதம் பிடித்தது இரண்டாவது குற்றம். இராமன் குரலில் மாரீசனின் அலறல் கேட்டவுடன் தன் கணவனுக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று அழுது புலம்பியது ஒரு பெண்ணிற்குரிய இயல்பான உணர்வுதான். உணர்வு மேம்பட்டபொழுது அறிவு தொழிற்படவில்லை. ஆனால், இளையவன் அவள் தலைவன் யார் என்பதைத் தருக்க ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் எடுத்து விளக்கின பொழுது அறிவு தொழிற்பட்டிருக்க வேண்டும். தாடகையைக் கொன்று, சிவதனுசை முறித்து, பரசுராமனை வென்று, கர துடனர்களை ஒழித்த ஒருவனுக்குக் கேவலம் ஒரு மானால் இடையூறு நேரும் என்று நினைத்ததே பெருந்தவறாகும். இளையவன் எடுத்துக்காட்டியபோதும் அதை அறிய மறுத்தது, அதைவிடப் பெரிய தவறாகும். இளையவன் மனம் புண்படும்படியாகப் பேசியது முன்னிரண்டு தவறுகளையும் விட மிகப்பெரிய தவறாகும். மேலே காட்டப்பட்ட குற்றங்கட்கும் இலக்குவனை இடித்துக் கூறிய குற்றங்கட்கும் தண்டனை பெறவேண்டியவள் பிராட்டி ஆவாள். மேலே சொன்ன எல்லாக் குற்றங்களையும்விட இலக்குவனை இழித்துப் பேசியதே மாபெரும் குற்றமாகும். இராமனுஜனும், பரமபாகவதனும் தங்கள் இருவரையும் ஊண் உறக்கமற்றுக் காக்கும் தெய்வமானவனுமான ஒருவனுக்குத் தவறிழைத்தது பெருமாளுக்குச் செய்த அபராதத்தைவிடப் பெரிய அபராதம் ஆகும். எனவே, அக்னிப் பிரவேசம் அதற்குரிய தண்டனை ஆயிற்று. அதாவது பகவத் அபசாரத்தைவிட, பாகவத அபசாரம் மன்னிக்க முடியாதது. எனவே தான், அக்னிப் பிரவேசம் என்று டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் தம்முடைய இராமாயணச் சிந்தனை' என்ற நூலில் எழுதியுள்ளார்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/332
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை