பிராட்டியும் இராமனும் 38 - 313 நம்முடைய கருத்தின்படி அக்கினிப் பிரவேசத்திற்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இராமன் உடனிருந்த வரையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பெருமாட்டிக்கு இளைய பெருமாள் தொண்டையும், சிறப்பையும், தன்னலமற்ற தியாகத்தையும் முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்போ, சந்தர்ப்பமோ, மனநிலையோ இல்லை. கணவனுக்கு ஆபத்து என்றால் எந்த ஒரு மனைவிக்கும் உண்டாகும் மனநிலையில்தான் பிராட்டி இருந்தாள். அந்த உணர்ச்சி வேகத்தில் அவனைக் குறைகூறிவிட்டாள். தான் சொல்வதை அவன் ஏற்க மறுத்தபொழுது காட்டுத் தீயில் புகுந்து உயிர் விடப் போகிறேன்' என்றும் கூறி நடக்கத் தொடங்கிவிட்டாள். தன் செயலைப் பற்றி ஆற அமர யோசிக்கும் சந்தர்ப்பம் அந்நிலையில் இல்லை. ஆனால், அசோகவனத்தில் ஒற்றையாக இருக்கும்பொழுது அமைதியான மனநிலையுடன் நடந்தவற்றை யெல்லாம் மீட்டும் நினைந்து பார்க்கும் பொழுதுதான், தான் செய்த குற்றத்தின் பரிமாணம் அவளுக்குத் தெரியவருகிறது. எண்ணலா வினையேன் ஆகிய நான் சொன்ன வாசகங்கேட்டு அறிவிலார் எனத் துறந்தானோ? என்று சிந்திக்கத் தொடங்கி விட்டாள். தான் செய்த குற்றத்தை இராகவன் மன்னிக்க மாட்டான் என்ற எண்ணமும் வலுப்பெற்று விட்டது. இந்த எண்ணம் வளர வளரக் குற்ற உணர்வு அவளை ஆட்கொண்டு விட்டது. குற்றவுணர்வுடையவர்கள் யாருக்கு அக் குற்றத்தைச் செய்தார்களோ அவர்களால் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பதும் அந்தத் தண்டனை கிடைத்தால்தான், தான் அக்குற்றத்தில் இருந்து விடுதலை பெறமுடியும் என்றும் நினைப்பதும், முறையானதே என்று மனவியலார் கூறுகிறார்கள். எப்படியாவது இளையபெருமாளிடம் மன்னிப்புக் கோரவேண்டும், இல்லாவிட்டால் அவன் முகத்தில் விழித்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழமுடியாது
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/333
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை