314 38 இராமன் - பன்முக நோக்கில் என்ற முடிவில் இருந்தவள் பிராட்டி அதனால்தான் அனுமனிடம் செய்தி சொல்லும் பொழுது ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு வார்த்தை கூறுதி என்று தொடங்கி ‘என்னைக் காத்து நின்றவர் இப்பொழுது என் விடுதலைக்கு உதவ வேண்டும் என்று கூறி அனுப்பினாள். பேரறிவாளனாகிய இராமபிரான் பிராட்டியின் மனத்தில் ஒடிய எண்ணங்களையும், குற்ற உணர்வினால் அவள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் அனுமன் மூலம் அவள் சொல்லி அனுப்பிய சொற்களில் இருந்தே புரிந்துகொண்டான். பிராட்டி ஒர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளாள். இலக்குவன்பால் பெரும் தவறிழைத்து விட்டோம் என்ற எண்ணம் அவள் மனத்தில் வலுவாகக் குடிகொண்டுவிட்டது. ஒருவேளை இலக்குவனே பார்த்து, 'என் அருமை அண்ணியே! உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று சொல்லக்கூடுமானால் அவள் மனம் அமைதி அடையலாம். எந்த நிலையிலும் எக்காலத்திலும் இலக்குவன் அவ்வாறு சொல்ல மாட்டான். அவனை அவ்வாறு சொல்ல வைப்பது என்பதும் இயலாத காரியம். அண்ணியின் மனநிலை அறிந்தால் உயிரை விட்டாலும் விடுவானே தவிர, தான் வணங்கும் தெய்வமாகிய அண்ணியை மன்னித்தேன் என்று சொல்ல அவன் ஒருப்படப் போவதில்லை. இந்த நிலையில் இராகவனுக்கு உள்ள ஒரே வழி, பிராட்டி இலக்குவன் மூலம் தண்டனை அடைந்ததாக நினைத்துத் திருப்தி அடையவேண்டும். அற்புதமான நாடகம் இத்தனை சிக்கல்களையும் அறிந்த இராமபிரான், அற்புதமான ஒரு நாடகத்தை நடிக்கத் தொடங்கிவிட்டான். அவன் ஏற்றுக் கொண்ட வேடமும், அவன் கூறிய சொற்களின் பொருளும் அவனையன்றி அருமை மனைவிக்கோ, உயிரனைய தம்பிக்கோ பூரண பாகவதனாக வளர்ந்துவிட்ட அனுமனுக்கோ தெரியாது; தெரியக் காரணமுமில்லை. இது
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/334
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை