பிராட்டியும் இராமனும் ேே 345 நாடகம் என்று இம்மூவரில் யாரேனும் ஒருவருக்குத் தெரிந்தால்கூட இராகவன் திட்டம் முழு வெற்றி அடையாது. இந்த விவரங்களை மனத்துட்கொண்டு மேல் நடப்பன வற்றைக் கவனித்தால் உண்மை விளங்கும். 'என் முன் நில்லாமல் சாதியால் அன்றிப் போதியால் என்றுக் கூறி விட்டான் இராகவன். - இந்நிலையில் இரத்தம் சிந்தும் கண்ணிருடன் துடித்துப் போன பிராட்டி, "மும்மூர்த்திகளும்கூடப் பெண்களின் மனநிலையை அறிய மாட்டாதவர்கள். அப்படி இருக்க உன்னைக் கூறிப் பயன் இல்லை. ஐயனே ! உன் தூதன் என்று சொல்லிக் கொண்டு மாருதி வந்தான், என் நிலையை நன்கு அறிந்தான். நீ வரப்போகிறாய் என்று உறுதி கூறினான். அவனால் உயிர் தாங்கினேன். என் நிலை பற்றி உன் துதுவன் உன்னிடம் சொல்லவில்லையா?" என்று ஒரு வினாவை எழுப்பினாள். (0024 இந்த வினாவிற்கு இராமன் விடை கூறத் தொடங்கினால் அவன் மேற்கொண்ட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிடும். ஒரு நாடகப் பாத்திரம் சிக்கலான சூழ்நிலையில் வாய் திறவாமல் இருப்பது போலவே இராகவனும் இருந்து விட்டான். எனவே, தீப் புக முடிவு செய்து விட்டாள் பிராட்டி இம் முடிவுக்கு வந்த வைதேகி அடுத்துச் செய்த காரியம் அவள் மனநிலையை நன்கு வெளிப்படுத்தியது. தன் முடிவைக் கூறிக் கொண்ட அவள், இளையவனை அழைத்து இடுதி, தீ என வாய் திறந்து கூறினாள். இது மிகவும் வியப்பான காரியம். இராம, இலக்குவர்கள் இப்பொழுது இருப்பது இலங்கையில், மூவருக்குமே இப்பகுதி முன்பின் பாராத புதிய பிரதேசம். தீ அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான விறகு, எண்ணெய், தீப்பந்தம் ஆகியவை வேண்டும். இவையெல்லாம் கிடைக்கும் இடம் அறிந்த ஒரே ஒருவன் அக்கூட்டத்தில் இருக்கிறான். உள்ளுர்க்காரனும் இப்போது அரசனாக முடிசூட்டிக் கொண்டவனுமான
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/335
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை