316 38 இராமன் - பன்முக நோக்கில் வீடணன்தான் அவன். விறகு முதலியவை கிடைக்குமிடத்தை அறிந்தவன் அவன் ஒருவன்தானே! தீமூட்டித் தருக என்று வேண்டுகிறவள் அவனைப் பார்த்தல்லவா கேட்டிருக்க வேண்டும்? இலங்கையைச் சுற்றிப்பாராமல் அசோக வனத்திலேயே தங்கிவிட்டாலும் சிலமாதங்கள் இலங்கையில் இருந்த வாய்ப்பு அவள் ஒருத்திக்குத்தான் உண்டு. வீடணனிடம் அவள் பேச விரும்பவில்லை என்றால், இத்தனை மாதங்களும் அவள் உயிர்க்கு உறுதுணையாக இருந்த வீடணன் மகள் திரிசடையை அல்லவா கேட்டிருக்க வேண்டும்? இவற்றையெல்லாம் விட்டு, சில நாட்களுக்கு முன்னே இலங்கை வந்தவனும், வந்ததிலிருந்த இந்த வினாடிவரை போரில் ஈடுபட்டிருப்பவனும், ஊருக்குப் புதியவனுமான இளையவனை அழைத்து தீ மூட்டித்தருக" என்றால் அதன் உட்கிடக்கை யாது? இலக்குவனுக்கு இழைத்த தீமைக்குக் கழுவாயாக அவன் கையால் தண்டனை பெற்றால் ஒழியத் தன் குற்ற உணர்விலிருந்து விடுபட முடியாது; ஆகையால் பிராட்டி இப்பொழுது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். இலக்குவன் கையால் தீ மூட்ட அதில் விழுந்து தன் குற்றத்தைப் போக்கிக் கொள்ள அவள் விரும்பினாள் என்பதே அவள் வேண்டுதலின் நுணுக்கமான பொருளாகும். இந்த நாடகத்தில் இராமன், சீதை இருவர் தவிர யாரும் பங்கேற்க முடியாத நிலை. இராமன் கூறியவை அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை முழுவதுமாக அறிந்தவன் அனுமன். பிராட்டி இலங்கையில் இருக்கும்பொழுது ஊனோ நறவமோ தொட்டது கூட இல்லை. பலமுறை இராவணன் வந்து அவளிடம் பேசியும் தோற்றுத் திரும்பியதையும், பிராட்டி யாருடைய மாளிகையிலும் தங்காமல் அசோக வனத்தில் இளையவன் தொடுத்த சாலையிலேயே இதுவரை தங்கியிருந்தாள் என்பதையும் அறிந்தவன் வீடணன். அண்ணிக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால் உலகம் அழியும் என்பதைத் திடமாக அறிந்தவன் இலக்குவன். இருந்தும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/336
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை