318 38 இராமன் - பன்முக நோக்கில் ஏதோ ஒர் அடிப்படை இருக்கிறது என்பதை இலக்குவன் அறிந்துகொண்டான். அதனாலும் அவன் இந்தப் பிரச்சனை யில் குறுக்கிட்டு அண்ணனோடு வாதாடத் தயாராயில்லை என்பது இரண்டாவது காரணம். என்றாலும், தான் வணங்கும் தெய்வமாகிய பிராட்டி, இளையவனே தீ அமைத்து தருக" என்று கூறியவுடன் இலக்குவன் நடுங்கிவிட்டான். இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருக்க அவன் விரும்பவில்லை. ஆனால், இந்த வினாடி வரை அண்ணன் அண்ணி ஏவலை மறுக்கத் துணிந்ததும் இல்லை. அதனால் அவன் என்ன செய்தான் என்பதைக் கவிஞன் தனக்கே உரிய முறையில் கூறுகிறான். "இளையவன் தனை அழைத்து, இடுதி, தி என, வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்; உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் களைகணைத்தொழ, அவன் கண்ணின் கூறினான்" - கம்ப. 10029 பிராட்டியின் ஆணையைக் கேட்ட இலக்குவன் துடித்துப் போய் இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்கக் கூடியவன் அண்ணனே ஆதலால் தனக்கும், நம்பினவர்கள் அனைவருக் கும் களைகண்ணாய் இருக்கின்ற இராகவனை வணங்கினா னாம். வணக்கத்தின் பொருள் யாது? என் மனத்தால் தாங்கக்கூடிய அளவையும் மீறி நடைபெறும் இந்தக் கொடுமை யிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் ஒருவனால்தான் முடியும். ஏதாவது வழி அருள்க' என்ற வேண்டுதலுடன் அண்ணனைத் தொழுது பார்த்தான். தொழுது பார்த்தானே தவிர, வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் இவனுக்குக் களைகண்ணாய் இருக்கும் இராகவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் கண்ணின் கூறினான் என்று முடிக்கிறான் கவிஞன். கண்ணில் என்ன சொன்னான் என்று கூறவில்லை.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/338
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை