பிராட்டியும் இராமனும் ேே 319 ஏதோ ஒன்றைத் தன் அருமைத் தம்பிக்குப் பெரிய பெருமாள் கண்ணின் மூலமாக அறிவித்தான். உடனே இளைய பெருமாள் மறுப்பொன்றும் சொல்லாது தீயை அமைத்துக் கொடுத்துவிட்டான் என்றால், இராகவன் கண்ணிற் கூறியதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இன்றுகூட வாயால் கூறமுடியாத சிலவற்றைக் கண்சாடை மூலம் நம்மில் பலரும் பரிமாறிக் கொள்கின்றனர். 'இளையவனே! இங்கு நடைபெறுவது நாடகம். இதனை உண்மை என்று நம்பி நீ பதைப்படைய வேண்டாம். சொல்லியபடி செய், அஞ்சவேண்டாம் என்ற கருத்தைக் கண்சாடை மூலம் இராமன் காட்டியதால்தான் இலக்குவன் அமைதியாக நெருப்பை அமைத்துத் தந்தான். நெருப்பைச் சுட்ட நெருப்பு இதன் பிறகு, பிராட்டி தீப்புகுந்ததும் அவள் கற்பின் வெம்மையை தாங்க முடியாமல் தீக்கடவுள் அவளை ஏந்தி இராமன் முன் வைத்ததும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். மீண்டும் அயோத்தி இலங்கையிலிருந்து மீண்ட இராகவன் முடிசூடிக் கொண்ட சில நாட்களிலேயே பரதனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டுப், பிராட்டியோடு அமைதியாக வாழத் தொடங்கினான் என்று பேசுகிறான் கம்பன். முடிவாக 'பிரிந்தவர் கூடினால் பேசலும் வேண்டுமோ என்று தொடங்கிய பிணைப்பு, கைகேயி சூழ்ச்சியாலும் நீங்கவில்லை. சூர்ப்பனகை என்னும் அரக்கியர் குலக் கோடரி - மாரீச மான் - பொய்த் துறவுக் கோலம் கொண்ட திருவிலி இராவணன் இவர்கள் அந்தப் பிணைப்பைத் தகர்த்தனர். பத்து மாதம் அசோகவனச் சிறை பிராட்டிக்கு. இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/339
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை