16 38 இராமன் - பன்முக நோக்கில் பாடலும் சோழனைத் திருமால் என்றே குறிக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இராம காதையின் குறிப்புகள் இரண்டும், புறத்திலும் அகத்திலும் வந்துள்ளமை முன்னர்க் குறிக்கப்பெற்றது. அக் காதையின் இன்னும் இரண்டு பகுதிகள் சங்கத்தை அடுத்த காலத்தில் பரவியிருந்தமையைப் பின்வரும் பாடல்கள் காட்டுகின்றன. ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன் வேள்வி போற்றிய இராமன் அவனொடு மிதிலை மூதூர் எய்திய ஞான்றை மதியுடம் பட்ட மடக்கண் சீதை கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக் கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித் துயில் எழுந்து மயங்கினன். - தொல். அகத்தினை - 54 உரைமேற்கோள். (விசுவாமித்திர முனிவன் தன் வேள்வி முற்ற இராமன் துணைக்கொண்டான். அது முடிந்தபின் அவனொடு மிதிலையாகிய பழைய ஊரை அடைந்த பொழுது, இராமனுடைய மனத்தில் தோன்றிய காதல் உணர்வு அவன் கண்மூலம் வெளிப்பட்டதைத் தன் கண்மூலம் பார்த்து அறிந்துகொண்ட அழகிய கண்களையுடைய சீதை, மறுநாள் வில் ஒடிக்கப்பட்ட ஒசையால் துயிலெழுந்து, அதை ஒடித்தவன் யார் என்று அறிய முடியாமையால் மனங்கலங்கி இருந்தாள்.) நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பில் மேற்கோளாகக் காட்டும் இப்பாடல், கம்பன் பிற்காலத்தில் தன் காப்பியத்தில் அற்புதமான நாடகச் சூழ்நிலையாக அமைப்பதற்கு உதவுகிறது என்பதையும் அறியமுடிகிறது. வேறு எந்த மொழியிலுள்ள இராமகாதையிலும் இல்லாத ஒரு கற்பனையாகும், இராமனும் சீதையும் கண்களால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டனர் என்று கம்பன் பாடுவது,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை