பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அனுமனும் இராமனும் ஈடு இணை இல்லாத பாத்திரம் இராம காதையில் முதல் மூன்று காண்டங்களில் இடம் பெறாமல் - கிஷ்கிந்தை, சுந்தரம், யுத்தம் ஆகிய பின் மூன்று காண்டங்களில் மட்டும் இடம்பெறும் அனுமன், கம்பன் படைப்புமுறையில் உலகக் காப்பியங்களில் வேறு யாரையும் ஈடு சொல்ல முடியாத சிறப்பைப் பெற்றுத் தனி ஒருவனாக நிற்கின்றான். பாத்திரப் படைப்பின் நோக்கம் வேதம் முதல் பல கலைகளையும் பயின்ற அறிஞர்கள் பலருண்டு. அறிவின் எல்லை கண்ட இவர்கள் எந்த நிலையிலும் தம்மை இழக்கமாட்டார்கள். இவர்களிடம் தலைதுாக்கி நிற்கும் இவ்வறிவே இவர்களிடம் தன்முனைப்பை அதிகப்படுத்தி விடுகிறது. பல சமயங்களில் இதே அறிவு, பக்தி உணர்வில் ஈடுபட முடியாமல் இவர்களைத் தடை செய்து விடுகிறது. பக்தி உணர்வின் முதற்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழத்தலாகும். அந்த உணர்வு வளர வளரத், தான் என்பது அறவே அழிந்துபோய்விடும். இதனையே நாவரசர் பெருமான், தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்று கூறுகிறார். பல சமயங்களில் அறிவின் துணைகொண்டு வளரும் கல்வி, இந்த உணர்விற்குத் தடையாகி விடுவதும் உண்டு. இங்குக் கூறப்பட்ட பொதுவான நியதிக்குச் சுந்தரர், நாவரசர் போன்ற கல்விக் கடலின் கரை கண்டு உணர்ந்த பெரியவர்கள் புறனடையானவர்கள். அ-21