அனுமனும் இராமனும் ேே 323 மெய்யர், கைச் சிலையர் என்பதைக் கண்டு நெஞ்சு அயிர்த்தான். ஒன்றுக்கொன்று பொருந்தாத இரண்டு பகுதிகள் வருகின்றவர்களிடம் காணப்படுகின்றன. தவமெய்யர் என்பதால் துறவுக்கோலம் பூண்டுள்ளனர். கைச்சிலையர் ஆகவும், வெஞ்சமத் தொழிலராகவும் இருப்பது தவக்கோலத் துடன் பொருந்தவில்லை.” (3754) “மும்மூர்த்திகள் என்று நினைத்தால் இவர்கள் இருவராக உள்ளனர். இவர்களுக்கு ஒப்புமை சொல்லக்கூடியவர் உலகில் யாரும் இல்லை. மிக மிக உயர்ந்ததாகிய கேவலத்து) இவர்களுடைய நிலைமையை எதுகொண்டு தெளிவது?" (3755) மூவர் அல்லர் முடிவு வந்த உடனேயே இவர்கட்கு ஒப்புமை கூற யாரும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். இவர்கள் முயன்று அடையவேண்டிய பொருள் எதுவுமில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டான். எனவே, கேவலத்து இவர் நிலைமை என்று கூறினான். இங்குக் கேவலம் என்பது வடசொல் என்பதையும் அதன் பொருள் மிக உயர்ந்தது என்பதையும் அறிதல் வேண்டும். "இவர்களது சிந்தையில் ஏதோ ஒரு சிறு துயரம் நேர்ந்துள்ளது. துன்பங் காரணமாக மனம் நொந்தவர்போல் உள்ளனர்; எதற்கெடுத்தாலும் மனத்தில் நோவடையும் சாதாரண மனிதர்களல்லர் இவர்கள். வானுலகத் தேவர்களும் அல்லர், மானுட வடிவில் உள்ளவர்கள். ஏதோ ஒரு பொருளைக் கை நழுவவிட்டுத் தேடும் இயல்பினராய் உள்ளனர். (375) “தருமமும், பண்பாடும் இவர்களுடைய உரிமைப் பொருளாகும். இவர்கள் தேடிவரும் பொருளும் அற்பமான தாகத் தெரியவில்லை. அருமருந்தாகிய அமிழ்தம் போன்ற அந்தப் பொருளை இடைவழியில் இழந்தனர் என்று தெரிகிறது. அதனால், வரும் வழியில் இருபக்கமும் தங்கள் பார்வையை ஒடவிட்டுக்கொண்டே நடக்கின்றனர்." (375)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/343
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை