324 38 இராமன் - பன்முக நோக்கில் "கோபம் என்னும் பொருளே இவர்கள்பால் இல்லை. கருணையின் கடல் போன்றவர்கள் இவர்கள். நன்மை என்னும் பொருளையன்றி வேறு ஒன்றையும் நாடாதவர்கள். இந்திரனை விஞ்சிய தோற்றமும், தருமதேவதையையும் விஞ்சிய நல்லொழுக்கமும், மன்மதனை விஞ்சிய அழகும், எமனை விஞ்சிய ஆற்றலும் கொண்டவர்கள்" (3758) மேலே கூறப்பெற்ற கருத்துகளை வரிசையாக எண்ணிப் பார்த்தால், ஒன்றை அறியலாம். குன்றின் முகட்டிலிருந்து அனுமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூரத்திலிருக்கும் இவர்கள் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். ஆகவே, மூவரோ தேவரோ என்ற காட்சி, முழுவதுமாக இவர்களை அறிந்துகொள்ள முடியாமல் தூரத்தில் இவர்களை வைத்துக்கொண்டு செய்த முடிவாகும். இந்தத் தூரத்துப் பார்வையிலேயே அவர்கள் துறவுக் கோலமும், அதனோடு பொருந்தாத கைவில் கோலமும் தெரிகின்றன. முகத்தைக் கூர்ந்து பார்க்க முடியாத நிலையில் அவன் நினைத்தவைதான் இதுவரை சொல்லப்பட்டவை. நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவர்கள் முகங்களைக் கூர்ந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டவுடன் அவர்கள் முகவசீகரமும், தெய்விகக் களை என்பவற்றோடு சற்றும் பொருந்தாத கவலைக் குறிகளும் தென்படுகின்றன. இவ்வாறு அவன் சிந்திக்கையிலேயே அவர்கள் இன்னும் அண்மையில் வந்துவிட்டனர். இப்பொழுது அவர்கள் முகம் தருமதேவதையை நினைவூட்டு கிறது. தரும தேவதைக்கு என்ன குறை ஏற்படும்? 'கிடைக்காத ஒரு பொருளைப் பெற்று இழந்துவிட்டவர்கள் போலும்’ என்ற முடிவுக்கு வருகிறான். இன்னும் அண்மையில் வந்தவுடன் இந்திரன் போன்ற பொலிவும், மன்மதன் போன்ற அழகும், எமன் போன்ற விறலும் உடையவர்கள் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறான். காட்சியில் முரண்பாட்டைக் கண்ட அனுமன், அடுத்துத் தன் அனுமானத்தைப் பயன்படுத்துகிறான். தரும தேவதை போன்ற இவர்கள் எதையோ இழந்தவர் போல்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/344
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை