அனுமனும் இராமனும் ே 325 காணப்படுகின்றனர். தரும தேவதை என்றால், அதற்கு இழப்பு ஒன்றும் இருக்க முடியாது. எனவே, அனுமன் தன் அனுமானத்தைப் பயன்படுத்தி இவர்கள் இழந்த பொருள் அற்பமானதன்று என்று ஊகிக்கிறான். இனி வருகின்றவர்கள் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள் என்பது இவன் கண்ட காட்சி. அதிலிருந்து அமிழ்தம் போன்ற அந்தப் பொருள் இவர்கள் கையிலிருந்து இடைவெளியில் தொலைந் திருக்க வேண்டும் என்பது அவன் அனுமானம். எனவே, சில வினாடிகள் நடந்து வரும் இருவரைக் கண்ணால் கண்டு, அதன் பயனாக இத்தனை அனுமானங்களையும் ஒருவன் செய்துமுடிக்கிறான் என்றால், இவன் கல்லாத கலையே இல்லை என்பதைக் கவிஞன் நமக்கு அறிவுறுத்துகிறான். கவிஞனின் இந்தக் கருத்தைப் பின்னர் இராகவன் கூற்றிலே (3768) குறிப்பதைக் காணலாம். தனது ஒப்பற்ற குணத்தால் தனக்குவமை இல்லாதவனா கிய அனுமன், அவர்கள் இருவரையும் அண்மையில் பார்த்த வுடன் அவனையும் அறியாமல் முன்பின் பாராத அவர்களிடம் அவன் மனத்தில் அன்பு நிறைந்தது; நெஞ்சு நெக்குருகிற்று. பல காலம் பழகிய அன்புடையோரை இடையில் பிரிந்திருந்து மீண்டும் எதிர்பாராமல் சந்திப்பவர் களைப்போல் அவர்களை நினைத்து நின்றான். கொடிய வனவிலங்குகளாகிய புலி முதலியனவும் இவர்களைக் கண்ட மாத்திரத்து தம் கொடுமை நீங்கப் பெற்றுத் தம் கன்றுகளைக் கண்டது போல இவர்கள் பின்னே நின்று, போய்விட்டார் களே என்று வருந்துவது போல நிற்பதைக் கண்டபிறகும் இவர்களை, சுக்கிரீவன் நினைப்பதுபோலப் பகைவர்கள் என்று எவ்வாறு கொள்ளமுடியும்? இவர்கள் நடந்து வரும் பாதையில் பறவைகள் கவரி வீசுகின்றன; மேகங்கள் மழைத் துளிகள் பொழிந்து பாதைக்குக் குளிர்ச்சி ஊட்டுகின்றன; சூடு பொருந்திய பரற்கற்கள்கூட இவர்கள் பாதம் பட்டவுடன் மலர் போன்ற மென்மை அடைகின்றன. செடிகளும், கொடிகளும் இவர்களைக் கண்டவுடன் வணங்குவதுபோல்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/345
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை