326 38 இராமன் - பன்முக நோக்கில் தலை சாய்க்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் தருமம் என்று சொல்லத் தக்கவர்கள் இவர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அனுமன். முதலிற் கண்ட பாடல்களில் காட்சி, அனுமானம் என்ற இரண்டு பிரமாணங்களைப் பயன்படுத்தி அனுமன் ஒரு முடிவுக்கு வந்ததைக் கண்டோம். இங்குச் சொல்லப்பட்ட பகுதியில் சுருதி பிரமாணத்தைப் பயன்படுத்துகிறான். தரும தேவதையை இவன் என்றும் கண்ணால் கண்டதும் இல்லை; அனுமானத்தால் உணர்ந்ததும் இல்லை. ஆனால், தரும தேவதையைக் கண்டால் நிலைஇயற் பொருள்களும், இயங்கியல் பொருள்களும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை சுருதிகளில் கற்றவன்; ஆதலால், அவற்றைப் பயன்படுத்தி இவர்களே தருமம் ஆவார் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். மாபெரும் அறிஞனான அவன் காட்சி, சுருதி, அனுமானம் என்ற அளவைகளின் துணைகொண்டு 'இவர்களே தருமம் ஆவார் என்ற முடிவுக்கு வந்தது சரியானதே ஆகும். அறிவும் உணர்வும் இதற்கு மேல் அந்த அறிவுக்கு வேலை கொடுத்தல் சரியன்று. அறிவு கண்ட இந்த முடிவை இப்பொழுது உணர்வு ஏற்றுக்கொள்கிறது. எந்த வினாடியில் ஒன்றை உணர்வு ஏற்றுக்கொள்கிறதோ அந்த வினாடியிலிருந்து அங்கு அறிவு தொழிற்படுவதில்லை. யார் இவர், எனக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு என்ன? யான் என்ன செய்யவேண்டும்? என்பன போன்ற அறிவை அடிப்படையாகக் கொண்ட வினாக்களுக்கு இங்கு வேலை இல்லை. ஒப்பற்ற பொருள் என்று கண்டவுடன் அப்பொருளிடத்து அன்பு சுரக்கின்றது, ஆர்வம் மிகுகின்றது. என்பு உருகுகின்றது. அதனிடம் இணைந்துவிடவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது. இதுதான் உணர்வின் வேலையாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/346
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை