அனுமனும் இராமனும் ே 327 இவர்களே தருமம் ஆவார் என்ற முடிவிற்கு அனுமன் வந்தவுடன் அவன் உணர்வு தொழிற்படுவதை இதோ கவிஞன் பேசுகிறான்: "துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினை தன்னை நீக்கி, தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்? என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல்காதல்; - கம்ப. 3769 என்று அனுமன் செயலை விவரிக்கிறான் கவிஞன். இராமனை அருகில் சென்று சந்திப்பதற்கு முன்பே அனுமனுடைய அறிவு தொழிற்பட்டு அதன் பயனாக உணர்வு தொழிற்பட்டு, இவர்கள் இருவரும் அறக்கடவுளின் வடிவம் ஆவர்' என்ற முடிவுக்கு வந்த நிலையில்தான் அவர்களைச் சந்திக்கின்றான். முன்பின் தெரியாத இடத்தில் ஒரு பிரமச்சாரி வந்து வணங்கி நிற்பதைக் கண்ட இராகவன் அவனை நன்கு கவனியாமல் கூட, நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்று வினவினான். இராமன் உற்ற அதிசயமும் கணிப்பும் மிகச் சாதாரணமான இந்த இரண்டு வினாக்கட்கும் விடைகூறத் தொடங்கிய அனுமனைச் சற்றும் எதிர்பாராத அதிசயத்துடன் இராமன் கவனிக்கத் தொடங்கினான். ஏனென்றால், இராமனை இன்னான் என்று தெரியாமலேயே அவனை விளிக்கும் முறையில் அனுமன் கூறிய இரண்டு வரிகள் இராமனுக்கு ஒர் இனிமையான அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன. அனுமன் என்ன கூறினான் என்பதை இரண்டு பாடல்களில் கூறுகிறான் கவிஞன். முதுற்பாடலின் முதலிரண்டு அடிகள் தவிர ஏனையவை இராமன் வினாக் களுக்கு தந்த விடையாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/347
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை