328 கிே இராமன் - பன்முக நோக்கில் “யான் வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தவன். என் பெயர் அனுமன் என்பதாகும். பக்கத்தில் உள்ள மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதிரவன் மகனாகிய சுக்கிரீவனுக்குப் பணிபுரிகின்றேன். தேவனே! உங்கள் வருகையைக் கண்ட எங்கள் மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்து உங்களை யார் என்று அறிந்து வருமாறு என்னை அனுப்பினான்" என்று கூறிமுடித்தான். இராமன், வினாவை யாரிடம் கேட்டிருந்தாலும் இதுபோன்ற விடை வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. - வியப்பில் ஆழ்ந்த இராமன் எதுகண்டு இவனைப் பற்றி விரிவாகத் தம்பியிடம் பேசினான் அந்த முதலிரண்டு அடிகள் பின்வருமாறு: 'மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண. $3. - கம்ப. 3765 "மேகம் போன்று இருண்ட மேனியை உடையவனே! மகளிர்க் கெல்லாம் நஞ்சாக இருப்பினும் பனி முதலியவற்றிற்குத் தேம்பாத தாமரைபோன்ற கண்ணை உடையவனே! என்பதே இதன் பொருளாகும். இராமனை மேகம் போன்றவன் என்றும் தாமரைக் கண்ணன் என்றும் நூற்றுக்கணக்கானவர் பல இடங்களில் கூறியுள்ளனர். அப்படியிருக்க, அதே கருத்தை அனுமன் கூறியவுடன் இராமனுக்கு ஏன் வியப்பு ஏற்பட்டது: இந்த விளிச்சொற்களைப் பார்த்தபொழுது இதில் ஒன்றும் புதுமை இல்லை என்று தெரிகிறது. அனுமன் கூறிய விடையிலும் புதுமை இல்லை. அப்படியிருக்க எதைவைத்துக் கொண்டு இராமன் அனுமனைப் பின்வருமாறு புகழ்கின்றான்?
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/348
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை